இந்நாளும் எந்நாளும் உல்லாசமே!

வாழ்க்கை என்பது பழையவை கழிதலும் புதியவை புகுதலுமாக காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வருபவை. ஆனால் சில பழையவை நம் வாழ்க்கைப்பயணத்தில் கூடவே வரும். அவை ஒவ்வொருவர் மனதுடனும் பயணித்துக்கொண்டேயிருக்கும் எத்தனைதான் புதியவைகள் வந்தாலும் அவற்றுடன் போராடி வென்று கொண்டேயிருக்கும். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்களாக இருக்கலாம். ஏன், அது ஒரு சில பாடல்களாக கூட இருக்கலாம்! ஆம், அப்படி என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் பாடலொன்றை பற்றித்தான் இங்கே சொல்லப்போகிறேன்.



இந்தப்பாடல் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பிடித்த பாடல். இளையராஜாவை கொண்டாடுகிறவர்கள் இந்தப்பாடலை எப்படியும் மறக்க மாட்டார்கள். அதுதான் சொல்லத்துடிக்குது மனசு என்ற படத்தில் இடம்பெற்ற "பூவே செம்பூவே" என்ற பலரின் இதயங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல். இந்தப்பாடல் ஏன் எனக்கு பிடித்தது என்று எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்றே விளங்கவில்லை அவ்வளவுக்கு என் மனதோடு ஒட்டிக்கொண்ட் பாடல் இது..

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே

இன்றைய தலைமுறையினர் 80 களில் வந்த பாடல்களையும் பழைய பாடல்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர். அவர்களால் அவற்றை ரசிக்க தெரியவில்லை! அவற்றை ரசிக்கும் நம்மையும் ஒரு விதமாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்காய் எம் ரசனையை மாற்றிக்கொள்ளத்தேவையில்லை. இளையராஜாவை கொண்டாடுபவர்களை குறை சொல்ல முடியாது காரணம் இது போன்று பலநூறு இசைமுத்துக்களை கொட்டித்தந்திருக்கிறார். அப்படியிருக்க கொண்டாடாமல் என்ன செய்வார்கள்! இளையராஜா என்ற தனிமனிதனின் குறை நிறைகளை மறந்தோமானால் அவரின் இசை என்றைக்கும் கொண்டாடப்படவேண்டியதுதான்.

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே


உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை


நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே


வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்


இப்பாடல் பற்றி பேசும் இதை எழுதிய வாலியையும் பாடிய ஜேசுதாசையும் மறக்க முடியாது, மறக்க கூடாது. அந்தளவுக்கு இவர்களின் பங்களிப்பு இந்தப்பாடலில் இருக்கிறது. வாலி அவர்கள் இளையராஜாவின் இசையில் பல அற்புதமான பாடல்களை எழுதியிருக்கிறார் அவற்றிலே இந்த பூவும் ஒன்று. ஜேசுதாசின் குரலின் இனிமையும், ராகம், தாளங்களின் அழகும் இந்தப்பாடலுக்கு இன்னும் வலிமை!

இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. எவ்வாறான சூழலில் இடம்பெறுகிறது என்பதையும் ஊகிக்கமுடியவில்லை. இதன் காட்சியமைப்பை பார்த்ததிலிருந்து பெரிய ஏமாற்றம். இவ்வளவு அழகான பாட்டை இவ்வளவு சொதப்பலான காட்சியமைப்பின் மூலம் சிதைத்துள்ளார்கள். பல அருமையான தமிழ் பாடல்கள் இவ்வாறுதான் கேட்க மட்டும்தான் முடிய்ம்! காட்சியமைப்பு படு சொதப்பலாக இருக்கும். அதுவும் இந்தப்பாடல் ராதா ரவியினால் வாயசைக்கப்படுவதை ஜீரணிக்கவே முடியவில்லை என்ன கொடும டைரக்டரே.


பாடல் கேட்க

4 comments:

thirupathi moorthy said...

இயக்குனர்: பி. லெனின்
தயாரிப்பாளர்: ஜெ. இரவி
நடிப்பு:

கார்த்திக்
சார்லி
மலேசியா வாசுதேவன்
ராதாரவி

இசையமைப்பு: இளையராஜா
ஒளிப்பதிவு: பி. கண்ணன்

பாடலாசிரியர்:வாலி
பாடியவர்:கே. ஜே. யேசுதாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

கல்லூரி நாட்களில் இந்தப் பாடலை பாடாத நாள் இல்லை... மனதை இதமாக்க வைக்கும் இனிமையான தாலாட்டுப் பாடல்...

தனிமரம் said...

பாடல் எனக்கும் பிடிக்கும் இந்தப்படமும் நானும் பார்த்தேன் ஆனால் காட்சி சொத்தப்பல் தான் ராஜா எப்போதும் ராஜா என்பதை இப்படியான பாடல்களை கேட்கும் போது நிரூபிக்கப்படும் நிஜம்!

'பரிவை' சே.குமார் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது...
அருமையான பாடல்...

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2