சவூதி நிதாகாத் சட்டமும், இந்திய முகாமைகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களும்.

சவூதி அரேபியா நிதாகாத் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக அறியமுடிகிறது நிதாகாத் சட்டம் என்பது, அனைத்துப் பணிகளிலும் பத்து சதவிகிதம் உள்நாட்டு மக்களே இருக்க வேண்டும் என்பதே அச்சட்டம். இந்தச்சட்டம் எல்லா துறைகளிலும் நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்ற சந்தேகம் இருந்தாலும் இச்சட்டம் வரவேற்க தகுந்ததாகும். காரணம், குறைந்தபட்சம் நிர்வாக முகாமை நடவடிக்கைகளிலாவது உள்நாட்டு பணியாளர்கள் அமர்த்தப்படும் போதுதான் வெளிநாட்டு (குறிப்பாக இந்தியா) நிர்வாக முகாமைகளால் அடிமட்ட தொழிலாளர் நலன் களில் மேற்கொள்ளப்படும் சுரண்டல்கள் குறைய வாய்ப்புள்ளது. அதிகமான வெளிநாட்டினரின் வேலை பறிபோகும் அபாயமும் இச்சட்டத்தினால் ஏற்படாமல் இல்லை.

சவூதி அரேபியாவில் எப்படியோ தெரியவில்லை குறிப்பாக இங்கே ஐக்கிய அரபு ராச்சியத்தில் (UAE) பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் நிர்வாக முகாமை பொறுப்புகள் வெளிநாட்டவரின் கையிலேயே உள்ளது. அதிலும் அதிகமாக இந்தியர்களிடம்! இப்படியான வெளிநாட்டு முகாமைகள் அவர்களின் சுயநலன் சார்ந்து மட்டுமே அதிகமான நேரங்களில் சிந்திப்பதினால் அடிமட்ட தொழிலாளர் நலன்களில் அக்கறை கொள்வதில்லை. சராசரியாக பார்க்கப்போனால் சிறுபாண்மையினராக இருக்கும் இந்த நிர்வாக முகாமையினரே நிறுவனத்தின் 90 வீதமான நலன்களை அனுபவிக்கின்றனர் பொருளாதார ரீதியாகவும் ஏனைய வசதி வாய்ப்புகள் மூலமாகவும். ஆனாலும் நிறுவனத்தில் பெரும்பாண்மையாக இருக்கும் கடினமான உடல் உழைப்பை வழங்கும் அடிமட்ட தொழிலாளர்கள்(அலுவலக ஊழியர்கள் உட்பட) 10 வீதமான நலன்களையே அனுபவிக்கின்றனர். இதே இடத்தில் உள்நாட்டு/வெளிநாட்டு நிர்வாகத்தினர் இருக்கும் பட்சத்தில் பக்கச்சார்பாக நடந்து கொள்ள முடியாமல் போகும் அதேவேளை எல்லோருக்கும் குறைந்தபட்ச நலன்களாவது கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் குறிப்பாக வெள்ளைக்கார ஐரோப்பிய தனியார் நிர்வாக முகாமைகள் தொழிலாளர்களின் நலன் சலுகைகள் விடயத்தில் ஓரளவுக்காவது நியாயமாக நடந்துகொள்வதை கவனிக்க முடியும்.

இந்திய நிர்வாக முகாமைகளில் குறிப்பாக கேரளாவைச்சேர்ந்த மலயாளிகளின் பொறுப்பிலிருக்கும் நிர்வாகத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமாக பக்கச்சார்பாக நடந்து கொள்வது அப்பட்டமாக தெரியும். மலயாளிகள் என்றால் உயர்ந்த சலுகைகளும் பதவிகளும். தமிழ்நாட்டுக்காரங்களுக்கு, இலங்கையர்களுக்கு, பிலிப்பின் காரர்களுக்கு ஒரு விதமாகவும் பங்காளிகள்,பாகிஸ்தானியர்கள் என்றால் மிக மோசமாகவும் நடந்து கொள்ளும் புத்தியே அதிகமான மலயாளிகளிடம் உள்ளது.

எஜமானர்களுக்கு விசுவாசமும் இலாபமும் காட்ட வேண்டும் என்பதற்காக Cost Cutting என்ற பெயரில், கொதிக்கும் வெயிலில் கட்டிட வேலை, துப்பரவு வேலை இன்ன பிற வேலைகள் செய்யும் அடி மட்ட தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து அவர்களுக்கு நியாயமாக கொடுக்க்படவேண்டிய சம்பள உயர்வுகளை வழங்காமல் வஞ்சிக்கும் அநேக தனியார் நிறுவனங்கள் இங்குண்டு.. இவ்வாறான தொழிலாளர் பிரச்சினைகளுக்கு போகிற போக்கில் நிறுவன உரிமையாளர்களான் அரபுக்களை மட்டும் குற்றம்சாட்டிவிட முடியாது. காரணம் முதலீடு செய்வதும் உயர்மட்ட முடிவுகளை எடுப்பது மட்டுமே அவர்களின் கைகளில் இருக்கும்.. ஏனைய தொழிலாளர் விடயங்கள் அனைத்தும் நிர்வாக முகாமைகளின் கீழே வரும். ஆகவே முகாமைகள் தொழிலாளர் நலன் சம்பந்தமாக பரிந்துரைக்கும் பட்சத்தில் அரபுக்கள் அவற்றை நிராகரிக்க போவதில்லை என்பது நிச்சயம். மற்றப்படி நிறுவன உரிமையாளர்களான அரபுக்களால் ஒவ்வொரு தொழிலாளர்களினதும் பிரச்சனைகளை கண்டுகொளவதென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

இச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு பணியிடங்களுக்கு உளநாட்டவர்கள் அமர்த்தப்பட்டாலும், சொகுசாக வாழ்ந்து பழகிய அவர்களால் வெளிநாட்டவர்கள் போல் கடின உழைப்பை வழங்க முடியுமா என்பதும் சந்தேகமே. பிறகு அவர்களின் வேலையை செய்ய இன்னுமொரு வெளிநாட்டவர் அமர்த்தப்படலாம் அல்லது இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரிக்கலாம். இங்கே அரச அலுவலகங்களில் வேலை பார்க்கும் உளநாட்டவர்களை கவனித்தாலே இந்த உண்மை புரியும்.

7 comments:

test said...

இதனால் கஷ்டப்படும் தொழிலாளிகளுக்கு எந்த நன்மையையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அரபிக்கள் தொழிலாளிகள் நலன்பற்றிக் கவலை கொள்வார்கள் என்பதெல்லாம்.. உங்களுக்கே தெரிந்திருக்குமே பெரும்பான்மையான அரபிக்கள் வெளிநாட்டுக்கரர்களை மதிக்கும் விதம்பற்றி!

அவர்கள் வேலைக்கு போவதால் நிகழும் மாற்றம் என்பது அந்தப் பத்துவீத அரபிக்களுக்கும் சேர்த்து வெளிநாட்டுக்காரர்கள் வேலை பார்க்க வேண்டியிருக்கும். சவூதியில் இருக்கும் என் நண்பன் அப்படித்தான் புலம்புகிறான். அவர்களை யாரும் கேட்கவும் முடியாது. இந்திய முகாமைகள் (குறிப்பாக வட இந்திய) எங்கேயும் அப்படித்தான். இங்கே கொழும்பில் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது. மலையாளிகள் பற்றி நீங்கள் நிறைய சொல்லலாம்... என்ன உங்கள் வலைத்தளம் நாறிவிடும் இல்லையா? :-)

Riyas said...

@ஜீ
//இதனால் கஷ்டப்படும் தொழிலாளிகளுக்கு எந்த நன்மையையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.// நண்மைகள் கிடைக்காவிட்டாலும் பக்கச்சார்பாக நடப்பது நிச்சயம் குறையும்.

//அரபிக்கள் தொழிலாளிகள் நலன்பற்றிக் கவலை கொள்வார்கள் என்பதெல்லாம்.. உங்களுக்கே தெரிந்திருக்குமே பெரும்பான்மையான அரபிக்கள் வெளிநாட்டுக்கரர்களை மதிக்கும் விதம்பற்றி!// அரபிகள் கொடூரமானவர்கள் தொழிலாளர் நலன்களைப்பற்றி கவலைப்படுவதேயில்லை என்ற பொதுப்புத்தியில் வந்த கருத்தாகவே இதை பார்க்கிறேன்.. வீட்டிலே வேலைவாங்கும் அரபிக்கும் படித்து நிர்வாக முகாமையில் இருக்கும் அரபிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. நான் வேலை செய்யும் நிறுவனத்திலேயே அதை பார்க்கிறேன் .

Seeni said...

pakirvukku nantri .!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நல்லதொரு பார்வை.
அருமையான அலசல்.
பெரும்பாலும் நீங்க சொல்றபடிதான் நிலைமை இருக்கு.

தனிமரம் said...

அருமையான அலசல் !

'பரிவை' சே.குமார் said...

உண்மையைச் சொல்லும் நல்லதொரு அலசல்.
அருமை.

ரங்குடு said...

சவூதியில் கழிவரை சுத்தப் படுத்தினால் காசு கூட கிடைக்குமென்ற நிலை இங்கே. அது மாறாத வரை 'இந்திய முகாமை' இப்படியே தொடரும்.

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...