பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு

இந்த தொடர்பதிவிற்கு அழைத்த(மாட்டிவிட்ட) அன்பின் நண்பர் ஜில்தண்ணி யோகேஸிற்கு எனது நன்றிகள்..
பதிவுலகம் முழுக்க இந்தமாதிரி பதிவாத்தான் இருக்கு.. நாம மெதுவா எஸ் ஆகிடலாம்னு பார்த்தா முடியல்ல.. என்னப்பத்தி பெருசா என்னங்க சொல்ல இருக்கா அதனால சிரிசா சொல்றன்..

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மொஹமட் ரியாஸ்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர்தான்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு மறக்கமுடியா அழகிய விபத்து - குழந்தை எழுந்து நடக்கத்தொடங்கிய முதல் நாள் அனுபவம்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் முயற்சித்தேன் முடிந்தது - பிரபலம் என்று சொல்லுமளவுக்கு இன்னுமில்லைங்க..

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஆம்.. எனது முதல் பதிவே அவ்வாறானதுதான்..
 ( இங்கு)

விளைவு.. நிறைய நண்பர்களின் அறிமுகமும் கருத்துக்களும்

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறது.. மற்றபடி நேரம் விரயம்தான்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்றுதான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நல்லா எழுதும் எல்லா பதிவர்களையும் பார்த்து... சிறுகதை,கதை எழுத ஆர்வமில்லாத என்னை இந்த பொறாமை ஒரு பதிவைத்தந்தது..

அந்தப்பதிவு

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
எனது முதல் பதிவிற்கு பின்னூட்டம் மூலம் பாராட்டியவர்கள்.
ஹாய் அரும்பாவூர்
ராகவன் நைஜீரியா
இருமேனி முபாரக்


நான் எழுதிய கவிதைகளை முதலில் பாராட்டியவர்கள்
மலிக்கா அக்கா
மதுரை சரவணன் சார்
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

எனது முதல் பதிவிலேயும் 50 வது பதிவுலயும் நிறைய கூறியிருக்கிறேன்..

13 comments:

கமலேஷ் said...

எதார்த்தமான பதில்கள் வாழ்த்துக்கள்..

Riyas said...

abul bazar/அபுல் பசர் has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

தெளிவான,அழுத்தமான பதிவு.
வாழ்த்துக்கள்

Riyas said...

அருண் பிரசாத் has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

தெளிவான சுருக்கமான பதில்கள்

Riyas said...

சௌந்தர் has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறது.. மற்றபடி நேரம் விரயம்தான்.///

உண்மைதான்....வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்...

Riyas said...

ஜில்தண்ணி - யோகேஷ் has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

நண்பரின் அழகான பதில்கள் :)

அந்த அழகிய விபத்த பத்தி ஒரு பதிவு போடு நண்பா :)

Riyas said...

Ananthi has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

//நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
அது ஒரு மறக்கமுடியா அழகிய விபத்து - குழந்தை எழுந்து நடக்கத்தொடங்கிய முதல் நாள் அனுபவம்.///

என்னங்க.. அந்த அழகிய விபத்தைப் பற்றி ஒன்னும் சொல்லாம விட்டுட்டீங்க.. :-))
எல்லா பதிலும் அருமை.. எளிமையா, அழகா சொல்லிருக்கிங்க..

Riyas said...

ஜெய்லானி has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

தெளிவான பதிலகள்..ரியாஸ்

Riyas said...

சிநேகிதன் அக்பர் has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

பதில்கள் அனைத்தும் அருமை ரியாஸ்

Riyas said...

தமிழ் உதயம் has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

சுருக்கமான பதில்கள்

Riyas said...

நாடோடி has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

எளிமையான‌ ப‌தில்க‌ள்.. வாழ்த்துக்க‌ள் ரியாஸ்..

Riyas said...

ப.செல்வக்குமார் has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

ரொம்ப எளிமைய சொல்லிட்டீங்க ..!!
எங்க நேரத்தையும் மிச்சம் படுத்திடீங்க..!!

Riyas said...

வெறும்பய has left a new comment on your post "பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு":

அடக்கமான பதிலகள்...

வாழ்த்துக்கள் நண்பரே

Jaleela Kamal said...

பளிச் பதில்கள்

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2