உள்ளம் கொள்ளை போகுதே..!

படிக்கும் காலத்தில் பாடல்கள் கேட்பதும், அதை எழுதி மனனம் செய்து முனுமுனுப்பதிலும் அலாதிப்பிரியம். அவ்வாறு சில பாடல்கள் மனதோடு ஒட்டிவிடுவதுமுண்டு. நான் பாடல்களை அதிகம் ரசிப்பது அதன் வரிகளுக்காகவும் அதில் சொல்லப்படும் விடயங்களுக்காகவும். சில பாடல்களின் வரிகள் புரியாவிட்டாலும் இசைக்காக மட்டுமே கேட்பதுமுண்டு.

அந்த வகையில் பாடசாலை நாட்களில் என்னை வசீகரித்த பாடல்களில் ஒன்று. உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படத்தில் இடம்பெற்ற "கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா"  என்ற பாடல்தான். இதில் இரண்டு பாடல்கள் இருக்கும். முதலாவது SPB,சுஜாதா பாடிய டூயட் பாடல் மற்றையது ஹரிஹரன் பாடிய சோகப்பாடல் இரண்டுமே பிடித்திருந்தாலும் அந்த சோகப்பாடல்தான் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை எழுதியது பா.விஜய். இவரின் ஆரம்பகால பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அழகானவை. அவர் நடிகரானதிலிருந்து நல்லதொரு பாடலாசிரியரை இழந்துவிட்டது தமிழ்சினிமா.

அந்த பாடலின் எல்லா வரிகளுமே அருமையாக எழுதியிருப்பார்..

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்..



உண்மையில் நான் ஒரு மெழுகாகும்
சிலர் இருட்டுக்குத்தான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்..



பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும இல்லை
அந்த கணணாடி நான் தானே 

முகமே இல்லை என்னிடம்தான்..


பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ...


செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்னுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்குதே....


காதிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ.

இந்த "காகிதத்தில் செய்த பூ" இந்த வரியை வைத்துக்கொண்டு நான் அப்போது கிறுக்கியது.

கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..


இப்பாடலை ஹரிஹரன் அனுபவித்து பாடியிருப்பார் ஏற்ற இறக்கங்களுடன், கேட்டுப்பாருங்கள்..


ஏனோ அப்போது பிடித்த பிரபுதேவாவை இப்போது பிடிப்பதில்லை..

25 comments:

Mahan.Thamesh said...

உள்ளம் கொள்ளை போகுதே .... உங்கள் பதிவை படித்த நேரம் முதல்
அருமையான பாடல்

சுதா SJ said...

அழகான பாடல்.. நானும் ரெம்ப ரசித்த பாடல் நன்பா :)

ஹும்.. பா.விஜயின் நடிப்பு ஆசையால் தமிழ்சினிமா ஒரு நல்ல பாடல் ஆசிரியரை இழந்துவிட்டது என்ற வருத்தம் எனக்குமுண்டு.... :(

Philosophy Prabhakaran said...

நல்ல பாடல்... எனக்கும் பிடிக்கும்தான்... ஆனால் ரொம்பப் பிடிக்காது...

பிரபுதேவாவை எனக்கு அப்போது மட்டுமல்ல எப்போதும் பிடிக்காது... பயபுள்ள நயனை கரெக்ட் பண்ணிட்டானே...

மாய உலகம் said...

அருமையான வரிகளை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா... ஹரிஹரன் வாய்சில் கேட்க மனதை வருடி எங்கோ அழைத்துச்செல்லும்.. அதிலும் அந்த கேரக்டர்க்கு பிரபுதேவா அவர்கள் அழகாக எக்ஸ்பிரசன் செய்து பின்னியெடுத்திருப்பார்... பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பா...

IlayaDhasan said...

எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு. ஹை, நானும் கூட பிரபு தேவா பத்தி நேத்து தான் இந்த பதிவை போட்டேன்

ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

சி.பி.செந்தில்குமார் said...

aahaa!!ஆஹா!

K.s.s.Rajh said...

அந்த சோகப்பாடலுக்கு பிரபுதேவா மிகவும் தத்ரூபமாக நடித்து இருப்பார்..காலத்தால் மறக்கமுடியாத பாடல்

K.s.s.Rajh said...

நயன் தாராவை தள்ளிக்கிட்டு போனதுதான் உங்களுக்கு பிரபுதேவாவை இப்ப பிடிக்கவில்லை போலும்..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

பா.விஜய் பேசாமல் பாடல்களே எழுதிக்கொண்டு இருந்திருக்கலாம்..நடிகர் ஆனதும் அவரது நல்ல பாடல்களை கானமுடியவில்லை

Mohamed Faaique said...

உங்க கவிதை சூப்பரா இருக்கு..
காகிதப் பூ பற்றி கவிக்கோ'வின் கவிதையொன்று இருக்கிறது, படித்திரிக்கிரீர்களா?

தனிமரம் said...

எனக்கும் பிடித்தபாடல் ஹரிஹரன் அனுபவித்துப்பாடியிருப்பார் கார்த்திக்ராஜா வின் மென்மையான இசை இன்னும் சிறப்பு இப்படத்தில் இன்னொரு பாடல் அன்பே அன்பே என் தேசிய கீதம் அதைப்பற்றி நானும் ஒரு பதிவு போட்டிருக்கின்றேன் நண்பா!
//
பிரபுதேவா இயல்பான நடிகர் ஆனால்
சரியான தீர்மானம் இல்லையே!

kobiraj said...

அருமையான பாடல்

SURYAJEEVA said...

அருமை

Riyas said...

@Mahan.Thamesh

//உள்ளம் கொள்ளை போகுதே .... உங்கள் பதிவை படித்த நேரம் முதல்
அருமையான பாடல்//

நன்றிங்க,,

Riyas said...

@துஷ்யந்தன்

நன்றி பாஸ் வருகைக்கும் கருத்திற்கும்..

Riyas said...

@Philosophy Prabhakaran

//பிரபுதேவாவை எனக்கு அப்போது மட்டுமல்ல எப்போதும் பிடிக்காது... பயபுள்ள நயனை கரெக்ட் பண்ணிட்டானே//

அட்டா இதுக்குத்தான் பிரபுதேவாவை உங்களுக்கு பிடிக்காதோ,, நன்றி பிரபா..

Riyas said...

@IlayaDhasan

//ஹை, நானும் கூட பிரபு தேவா பத்தி நேத்து தான் இந்த பதிவை போட்டேன்//

ஆமாம் நானும் வந்து படித்தேன் அருமை வருகைக்கு நன்றி,


@சி.பி.செந்தில்குமார்

வாங்க பெரியவரே,,

Riyas said...

@மாய உலகம்

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே,,

Riyas said...

@K.s.s.Rajh said...
//நயன் தாராவை தள்ளிக்கிட்டு போனதுதான் உங்களுக்கு பிரபுதேவாவை இப்ப பிடிக்கவில்லை போலும்..ஹி.ஹி.ஹி.ஹி//

சரியா கண்டுபுடிச்சிட்டிங்களே எப்புடி..


//பா.விஜய் பேசாமல் பாடல்களே எழுதிக்கொண்டு இருந்திருக்கலாம்//

எனக்கும் இந்த ஆதங்கம்தான் நன்றி,,

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....


//கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ.//

நல்ல ரசனை

Rizi said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நலமா?

நீங்கள் சொல்வதும் உண்மை தான்,

பா.விஜய் இன் அசத்தலான பாடல்கள், உடைந்த நிலாக்கள் தொகுப்புக்கள் போல எதிர்காலத்தில் இனி அவரலால் தர முடியுமா என்பது ஐயம் தான்..

எனக்கும் இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும்.

Anonymous said...

நானும் ரசித்த பாடல்...9thaara...தான் காரணமோ...கடைசி கமெண்டுக்கு..

அம்பாளடியாள் said...

//கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ.//

ஆகா அருமையான சிந்தனை
வெள்ளோட்டம் வாழ்த்துக்கள்
சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .....

அம்பாளடியாள் said...

அனைத்து ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ .......

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...