பொய் சொல்லும் கனவுகள்..!



முத்தத்துளிகள் 
உதட்டில் நுழைந்து
தொண்டையில் மிதந்து 
உணர்வை தடவி 
உயிரைத்தொடுகிறது. 
என் காதலி 
தேநீர்..



உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
படர்ந்து 
தொடர்ந்து
தவழ்ந்து
உருண்டோடி
விளையாடுகிறதே
அதிர்ஷ்டக்கார
மழைத்துளிகள்..!



வருகிறாள்...
சிரிக்கிறாள்...
ரசிக்கிறாள்....
குழந்தை மகிழ
பொய் கதை சொல்லும்
தாய் போல
பொய் சொல்கிறது
கனவுகள்..


நினைவுகளை 
சுமந்து செல்கிறது மனசு
புத்தகங்கள்
சுமந்து செல்லும்
பள்ளி குழந்தைகளாய்..!

11 comments:

ஜெய்லானி said...

ரசனையான கவிதை :-)

சுதா SJ said...

கவிதை..
காதல் சொட்டும் தேன் துளிகள்
ரெம்ப ருசித்து ரசித்தேன் நன்பா
பிரமாதம் ^_^

சுதா SJ said...

 காதல் தேவதையின் செல்ல பிள்ளையோ நீங்கள்...! காதல் கவி அழகாக வருகிறது உங்களுக்கு... கலக்குங்க தொடர்ந்து. :)

மாய உலகம் said...

பொய் சொல்லும் கனவுகள் பிடிச்சுருக்கு..

Anonymous said...

கவிதை பிடிச்சுருக்கு நண்பரே...கலக்குங்க...

SURYAJEEVA said...

பொய்கள் சொன்னால் தான் அது கனவு... உண்மை சொல்லிவிட்டால் உங்களை சாமியாராக்கி ரஞ்சிதாவை கூடவே உட்கார வைத்து விடுவார்கள் ஜாக்கிரதை

'பரிவை' சே.குமார் said...

Kavithai arumai.

Mohamed Faaique said...
This comment has been removed by the author.
Mohamed Faaique said...

வீட்டுல பொண்ணு பாத்துட்டாங்க போல.... காதல் ரசம் சொட்டுது....

பிலஹரி:) ) அதிரா said...

அழகான கவிதை...கலக்கல்.

Unknown said...

கனவுகளின் உண்மையை சொன்னதற்க்கு நன்றி.!

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2