தூர தேசமொன்றில்
உதிர்ந்து போகும் உயிர்களும்
சிதறும் இரத்தங்களும்
எண்ணிக்கைகளாகவும்
புள்ளிவிபரங்களாகவும்
செய்திகளாய் மட்டும்
நம் கண் முன்னே..
மிருக வேட்டையாடி
பசியாறினான்
ஆதி மனிதன்.
மனித வேட்டையாடி
குஷியாகிறான்
நவீன மனிதன்.
நாகரீகமடைந்துவிட்டதாய்
விளம்பரம் வேறு..
காலத்துக்கு காலம்
மலிவாகும் பொருள்
விலை போல
மனித உயிர்களின்
மலிவுக்காலம்
இது போல...
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
கொள்முதல் செய்யப்படுகிறது..
பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்
இனிமேலும்
மழைக்குப்பதிலாய்
மனித இரத்தம் கேட்கும்
நிலை வரலாம்..
பயங்கரவாதம்
உயிர் பறிக்கும் கொடிய நோய்
தொற்றிக்கொள்ளாமல்
அழித்தேவிடுவோம்
நோயையும்
நோய் காரணிகளையும்..
17 comments:
போரும் வன்முறையும் தொலைத்த புதிய உலகு எப்போ தோன்றுமோ...
அரசுகள் கட்டவிழ்த்துவிடும் வன்முறை, உள்நாட்டு பயங்கரவாதம் , எந்தப்பெயரில் வன்முறை என்றாலும் பறிக்கப்படுவதென்னவோ அப்பாவி மக்களின் உயிர்களே.
பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்
இனிமேலும்
மழைக்குப்பதிலாய்
மனித இரத்தம் கேட்கும்
நிலை வரலாம்
குறைந்து வரும் மனித
நேயத்தை அழகாகச சொன்னீர்கள்
ஆழமான கருத்து! அருமை!
புலவர் சா இராமாநுசம்
காலத்துக்கு காலம்
மலிவாகும் பொருள்
விலை போல
மனித உயிர்களின்
மலிவுக்காலம்
இது போல...
மொத்தமாகவும்
சில்லறையாகவும்
கொள்முதல் செய்யப்படுகிறது..
//கவிதை வரிகளில் தணல் தெறிக்கின்றது
அநியாயமாய் பறிபோவது சாதாரண மக்கள் உயிர்களே...பயங்கரவாதம் அழிக்கவேண்டிய அவசியமான ஒன்று...நல்லோதோர் ஆக்கம்...சிந்தனையும் கூட நண்பரே..
போர்கள் இல்லாத அமைதியான உலகம் வேண்டும் எப்போ உருவாகும்
ஸலாம் சகோ.ரியாஸ்,
//பயங்கரவாதம்
உயிர் பறிக்கும் கொடிய நோய்
தொற்றிக்கொள்ளாமல்
அழித்தேவிடுவோம்
நோயையும்
நோய் காரணிகளையும்..//---சரியாய் சொன்னீங்க... சகோ.ரியாஸ்.
நோயையும்
நோய் காரணிகளையும்
அழிக்கும் முன்
பயங்கரவாதிகளை
மனிதர்களிடமிருந்தும்
தனிமைப்படுத்திடுவோம்....
கூடவே நம் எண்ணங்களிலும்
எழுத்துக்களிலும் இருந்தும்..!
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்//
அருமை
அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்//
இது செம
அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்//
இது செம
அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்//
இது செம
அருமையான கவிதை.
//பூமிக்கு
தண்ணீர் புகட்டாவிட்டாலும்
பரவாயில்லை
மனித இரத்தம் புகட்டாதீர்கள்//
இது செம
Neruppu Kavithai. Vaalthukkal!
TM 11.
இன்றைய சூழலை மிகச் சரியாகச் சொல்லிப்போகும்
அருமையான பதிவு
வெகு நாட்களுக்குப் பின் ஒரு நல்ல படைப்பை
ருசித்த திருப்தி
மனம் கவார்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 12
நிதர்சனமான உண்மைகளை கவிதையாக்கி இருக்கிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்.
என் இனிய இரவு வணக்கம்,
நல்ல கவிதை..ஆழமாக மனதை கவர்ந்துவிட்டது..நன்றி.
Post a Comment