நடுப்பகல் வேளையொன்றில்
நடந்துகொண்டிருக்கிறேன்
யாருமற்ற
மண்சாலையில்.
சூரியன்
அதன் வேலையை
பாரபட்சமின்றி செய்துகொண்டிருந்தது
மனித சஞ்சாரமேயில்லை
பார்வை
செல்லும் தூரத்திற்கு.
ஆங்காங்கே
மேய்ந்துகொண்டிருக்கும்
மாடுகள் மட்டும்
'யாருபெத்த மனிதப்பிறவியோ
நடுவெயில்ல
போறான் பாரு' என
வேடிக்கையாய் தங்களுக்குள்
பேசிக்கொண்டது போல
என்னைப்பார்த்து
எங்கே செல்கிறாய்
எனக்கேட்பது போல
'ம்மே' எனக்கத்துகிறது..
வெயிலின் அகோரம்
நாவின் ஈரப்பதம் குறைந்து
தொண்டை
வறண்டு போனது
சாலையோரத்தில்
மழையில்லாமல் வறண்டு போன
வயல் நிலங்கள் போல..
தாகம் தீர்க்க
தண்ணீரோ
தங்கிச்செல்ல
மர நிழலோ இல்லா
நீண்ட வறண்ட சாலை..
எச்சிலும்
தீர்ந்துவிடுமோ என்றளவுக்கு
எச்சில் குடித்தே
வறண்ட தொண்டையை
உயிர்ப்பிக்கிறேன்.
'உலக மக்களில்
அநேகம் பேர்
குடி நீருக்காய் கஷ்டப்படுகின்றனர்'
எப்போதோ
செய்தியாய் மட்டும் படித்தது
முதல் முதலாய்
உணர்வாய் உணர நேர்ந்தது..
சென்று சேருமிடம்
நெருங்க நெருங்க
சாலைகள் நீண்டுகொண்டே போவதாய்
உணர்வு.
கால்களும் நடக்காமல்
அடம்பிடிக்க
ஆரம்பித்தது..
அப்பொழுது அங்கேயொரு
ஆச்சர்யம்
ஆமாம் அந்த நேரத்தைபொருத்து
அது
ஆச்சர்யம்தான்
அங்கே சிறிய குட்டையொன்றில்
தண்ணீர் கொஞ்சம்
சில மாடுகள்
மட்டும்
பருகிக்கொண்டிருந்தது..
பசியோடிருந்த குழந்தை
தாயை கண்டது போல்
ஓர் புன்னகை
மனதெங்கும்.
ஓடிச்சென்று
அள்ளிப்பருகிய போது
அதுவரைக்கும்
உலகில் பருகிய பாணங்களைவிடவும்
அப்போதுதான்
அதிக சுவை கொண்டதை
புசித்ததுபோல் உணர்வு..
பருகி முடிந்து
பக்கத்தில் நோக்கினால்
மரநிழல்.
தாய்ப்பாலருந்துவிட்டு
பஞ்சுமெத்தையில்
துயில்கொள்ளும்
குழந்தையின்
நிம்மதித்தருணங்கள் போல்
மரநிழலுக்கு கீழால்
காற்றுவந்து
உடல் தழுவிச்செல்ல
இளைப்பாறுகிறேன்
இதைவிட உலகில்
வேறுசுகம்
வேண்டாமே என..
20 comments:
அருமையான வரிகள்.நன்றி.
நன்றி குமரன்.
////மரநிழலுக்கு கீழால்
காற்றுவந்து
உடல் தழுவிச்செல்ல
இளைப்பாறுகிறேன்
இதைவிட உலகில்
வேறுசுகம்
வேண்டாமே என.////
களைத்திருக்கும் போது மரநிழலில் உறங்கும் சுகமே தனிதான்
அருமையான கவிவரிகள் பாஸ்
ஆங்காங்கே சுட்டிச் சொல்லும் உவமைகள் அருமை சகோ!
பாலை வனத்தில் பசுந்திட்டு போல!
சா இராமாநுசம்
நன்றி பாஸ்,
நன்றி ஐயா,,
மரநிழலுக்கு கீழால்
காற்றுவந்து
உடல் தழுவிச்செல்ல
இளைப்பாறுகிறேன்
இதைவிட உலகில்
வேறுசுகம்
வேண்டாமே//
ஆதங்க வரிகள் சகோதரா......
எதோ ஒன்று இல்லாத அல்லது கிடைக்காத சமயத்தில்தான் அதன் அருமை தெரிகிறது.அதன் உட்கருத்துக்கொண்ட வரிகள் அருமை ரியாஸ் !
நானும் இதே அனுபவத்தை அடைந்திருக்கிறேன். இயற்கையோடியைந்த இன்பம் இணையற்றதுதான். அழகு கவிதை.
தமஓ 5.
ஸலாம் சகோ.ரியாஸ்,
'தேவைக்கு மட்டுமே வசதிகள்' என்ற எளிமையான வாழ்வுக்கு கட்டியம் கூறும் அருமையான இந்த பதிவுக்கு ஏற்ற படத்தை தேர்வு செய்தீர்களா... அல்லது அந்த சிறப்பான படத்தை பார்த்தவுடன் அதற்கு தக்கவாறு இந்த பதிவை எழுதினீர்களா..?
அழகான கவிதை ! நல்ல விளக்கங்கள் ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.
இந்தப்பதிவை எழுதிவிட்டுத்தான் அந்தப்படத்தை கூகுளில் தேடிப்பெற்றேன்..
இந்தப்பதிவு முற்றிலும் கற்பனையல்ல சில சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்தவை..
அந்த தண்ணீருக்காய் தவித்த தருணங்களும் மரநிழல் ஓய்வும்..
நன்றி ஹேமா அக்கா.
நன்றிங்க வருகைக்கும் ஓட்டுக்கும்,,
தேவையான நேரத்தில் கிடைக்கும் போதுதான் எந்தப் பொருளினதும் பெருமை தெரிகிறது...
அருமையான வரிகள்
நன்றி நண்பரே..
நன்றிங்க..
ஆமாம் பாயிக் உண்மைதான்,, நன்றி.
ஒன்று இல்லாத போதுதான் அதன் அருமை புரியும் என்பதை உணர்த்திய, நயமான, எளிய கவைதை.
அழகிய சொற்களில் கவிதை படைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
Post a Comment