நேர்முகத்தேர்வு..!

நேர்முகத்தேர்வு அதுதாங்க இந்த இண்டர்வீவ் இத எவன் கண்டுபுடிச்சன்னு தெரிஞ்சா அவனுக்கு நாலு சாத்து சாத்தனும் போலிருக்கும் பலருக்கும்.. உண்மைதாங்க நானும் இந்த இண்டர்வீவ் கொடுமையில சிக்கி சின்னாபின்னாமாகி நொந்து நூடுல்ஸாகி வந்தவந்தாங்க.. இண்டர்வீயில் தேர்வாகி இப்ப வெளிநாட்டு வேலையில் இருக்கிறன்னு நெனச்சாலே பிரமிப்பா இருக்கு நம்பவேமுடியல்ல..


வெளிநாட்டு வேலைக்காக வேண்டி முதலாவதாக சென்ற இண்டர்வீவ் இன்னும் மறக்கமுடியவில்லை உள்ள போய் உட்கார்ந்ததும் மூனு பேரு சுத்தி உட்காந்திருந்தாங்க.. பயந்து தொண்டை வாயல்லாம் வறண்டு வார்த்தையே வெளியே வரல்ல... சத்தமா பேசுப்பா கேட்குதில்லன்னு சொன்னாங்க..அதுதான் பேச்சு வரலயே வேற எப்பிடி பேசுவேன்.. வந்ததுக்கு நன்றி போய் வான்னு சொல்லிட்டாங்க..நானும் திரும்பி வந்துட்டன் வேற அங்க நின்னு அழவா முடியும்..

அடுத்ததா இந்த சிரியா எகிப்து லெபனான் காரனுகள் இண்டர்வியுக்கு வந்துடக்கூடாதுன்னு நினைச்சதும் உண்டு ஏன்ணா அவங்க பேசுற ஆங்கிலத்த இலகுவில் புரிஞ்சு கொள்ளமுடியாது. ஒரு முறை அப்பிடித்தான் இந்த நாட்டைச்சேர்ந்த ஒருவனிடம் போய் சிக்கிட்டேன் அடப்பாவி..! அவங்கேட்ட முதல் கேள்வியே எனக்கு என்னென்னு புரியல்ல அப்புறமா 'Sorry'.. ன்னு சொன்னேன் திரும்பவும் அதேகேள்விய கேட்டான் திரும்பவும் எனக்கு என்னன்னு புரியல்ல அப்புறமா.. 'sorry i can't understand' முழுசா சொல்லி முடியல்ல 'sorry you can go' ன்னு சொல்லிண்டாப்பா.. நானும் எவ்வளவு நேரம்தான் தெரிஞ்சமாதிரியே நடிக்கிறது..அவ்வ்வ்வ்வ்வ்வ்


இப்படி இண்டர்வியுக்கு போய் போய் நொந்து போய் உட்கார்ந்திருந்தோம் நானும் என் நண்பனும்.. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம் இனிமே இந்த இண்டர்வீவ் வெச்சு ஆளெடுக்கிற கம்பெனிக்கு போககூடாது.. எவன் C.V ஐ பார்த்துட்டு நேரா வேலைக்கு கூப்புட்றானோ அங்கதான் போகனும்டா.. இப்படி இருக்கும் போதுதான் இந்த அபுதாபி வேலைக்கு பத்திரிகையில் விளம்பரம் வந்திருந்திச்சி.. ஏற்கனவே இலங்கையில் செய்த வேலைக்கும் இதுக்கும் தொடர்பிருந்ததால் அனுபவமும் இருந்தது.. எப்படியாவது இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடைசியா ஒரு முறை பார்க்கலாமுன்னு கிளம்பிட்டன்..


இண்டர்வியுக்கு போனா அங்க 3 பேர் தேவைக்கு 30 பேர் மட்டு வந்திருந்தாங்க எல்லாரும் டை கட்டி கடும் ஆபிசர் போல வந்திருந்தாங்க நான் சும்மா ஏனோதானோன்னு போயிருந்தேன் அதுலயே பாதி நம்பிக்கை போயிருச்சி.. சரி உள்ளே போய் உக்காந்தாச்சி இப்ப ஸ்டார்ட் இண்டர்வீவ்.. பண்ண வந்தவரு இந்தியா காரரு அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்டாரு கேள்வி கேட்டுட்டுருக்கும் போது பாதியில.. நான் கையால மடியால எல்லாம் போட்டு பேசின அறைகுறை ஆங்கிலத்த அவருக்கு சகிக்க முடியல்ல போல.. உனக்கு வேறென்ன மொழி தெரியும்ன்னு கேட்டாரு

நான் தமிழ் தெரியும்ன்னு சொன்னேன்.. உனக்கு தமிழ் தெரியுமா என்று.. தமிழிலேயே வியப்புடன் கேட்டார்.. அப்பாடா இவருக்கும் தமிழ் தெரியும்.. "ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்று விட்டோம் ஆனால ஆங்கிலேயே மொழியிடமிருந்து சுதந்திரம் பெறவில்லையே" என்று நினைத்த எனக்கு சுதந்திரம் கிடைத்த உணர்வு அத்தருணம்.. அதன்பிறகு அந்த வேலையும் கிடைத்தது.. இன்றுவரை அவர்தான் என் மேனேஜர்.. அவர் பெங்களூர் காரர் தமிழ்நாட்டில்தான் படித்தாராம்.. தமிழ் தெரியும் என்ற ஒரு காரணத்திற்காகத்தான் என்னை வேலையில் சேர்த்தாரோ என்ற எண்ணமும் என்னுள் எழுவதுண்டு..

இதைச்சொல்லும் போதே இன்னும் இருவர் இண்டர்வீயுக்கு போன குட்டிக்கதை ஞாபகத்திற்கு வருது அதையும் படிச்சுட்டு போங்க.. 2 நண்பர்கள் இண்டர்வியுக்கு போனாங்களாம். அதுல ஒருத்தனுக்கு அதுதான் முதல் தடவை அடுத்தவனுக்கு கொஞ்சம் அனுபவமுண்டு.. அனுபமில்லாதவன் இவனப்பார்த்து சொன்னானாம் டேய் மச்சான் எனக்கு பயத்துல கை கால் எல்லாம் நடுங்குது உள்ள என்ன கேட்பாங்களே தெரியாது.. நீ முதல்ல போ உன்னிடம் என்ன கேள்வி கேட்குறாங்களோ அத என்னிடம் வந்து சொல்லு அப்புறம் நான் அதக்கேத்தமாதிரி ரெடியாகிட்டு போறேன்னு.. சரின்னு அவன் உள்ள போய் கேட்ட கேள்விக்கெல்லம் பதில் சொல்லிட்டு வெளிய வந்துட்டான்..

இப்போ அடுத்தவன் கேட்டான் மச்சான் என்ன கேள்விடா கேட்டாங்க.. அதுக்கு அவன் எல்லாம் ஜுஜுபி கேள்விடா சும்மா டங் டங் ன்னு பதில் சொல்லிட்டு வந்துட்டன்.. முதலாவதாக இலங்கைக்கு எப்போ சுதந்திரம் கிடைச்சதுன்னு கேட்டாங்க.. 1815 லிருந்து முயற்சி செயது 1948 ல கிடைச்சதுன்னு சொன்னேன்.. அடுத்ததா பிடித்த நபர் யாருன்னு கேட்டாங்க அது காலத்திற்கு காலம் மாறுபடும் இப்பன்னு சொன்னா நீங்கதான்னு சொன்னேன் அது அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..அடுத்ததா இலங்கை இப்போ அமைதியான நாடா அதப்பத்தி என்ன நினைக்கிறிங்கன்னு கேட்டாங்க அதுக்கு நான் அதப்பத்தி சரியா சொல்ல முடியாது.. சரியா விசாரிச்சுதான் சொல்லனும்னு சொன்னேன்.. அவ்வளவுதான் மச்சான்..

அவ்வளவுதானா.. இத நாங்களும் சொல்வம்ல்ல்ன்னு பில்டப் கொடுத்துட்டு உள்ள போயிட்டான்.. மனசு சிந்தனை எல்லாம் அந்த மூனு கேள்வியும் விடையையும் பத்தித்தான்.. உள்ள போய் உட்காந்தா முதல் கேள்வியா நீங்க எப்ப பொறந்திங்கன்னு கேட்டுட்டாரு அதுக்கு இவன் 1815 லிருந்து முயற்சி செய்து 1948 லன்னு சொல்லிட்டான்.. அதக்கேட்டதும் அவரு.. என்னது... 1815 லிருந்து முயற்சி பண்ணாங்களா...? அடுத்ததா அப்போ உன் அப்பா யாருன்னு கேட்டாங்க.. அதுக்கு அவன் அது காலத்திற்கு காலம் மாறுபடும் இப்பன்னு சொன்னா நீங்கதான்.. அப்பிடின்னு சொல்லிட்டான் அதக்கேட்டதும் அவரு கோபத்துல அடங்கொய்யால உன் அப்பன் நானா..? உனக்கு பைத்தியா இல்ல எனக்கு பைத்தியமா அப்பிடின்னு கேட்டாரு அதுக்கு அவன்.அதப்பத்தி சரியா சொல்ல முடியாது.. சரியா விசாரிச்சுதான் சொல்லனும்னு சொல்லிட்டான்பா.. என்ன கொடும சார் இந்த இண்டர்வீவ்..

2 comments:

Raghu said...

ஹாஹ்ஹா ந‌ல்ல‌ க‌தை

LIFE DIRECTION NETWORK said...

வலைப்பதிவர் அவர்களே.. நான் வாழும் உலகம், என் மௌனங்களின் மொழிபெயர்ப்பு இது எல்லோரும் 
விரும்பும் மிக சிறந்த தமிழ் தலைப்பாகும் முதலில் 
இந்த தலைப்புக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள், உங்கள் அழகான தலைப்பை போல உங்கள் தளத்தை 
அலங்கரிக்கும் தொழில் நுட்ப வேலைகளையும் 
செய்யுங்கள், உங்கள் மௌனங்களின் மொழி பெயர்ப்பு மிக அருமை வாழ்த்துக்கள்

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2