Unnai Thotta Thendral indru lyrics in Tamil

 பாடல் :உன்னைத் தொட்ட தென்றல் இன்று
படம் : தலைவாசல் 
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் . சித்ரா
இசை அமைப்பாளர் : பால பாரதி
Unnai Thotta Thendral indru
image source youtube.com


பாடல் வரிகள் 

SPB : உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

Chitra : பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

SPB : உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

SPB : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே

Chitra : உறங்கும் போதும் உந்தன் பேரைச்
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போதும் உச்சி வேர்க்கிறேன்
ஆண் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்

Chitra : உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

Chitra : உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்

SPB : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லயே 
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
பெண் : நீ பார்வையில் காதலன்
பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே

SPB : உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி

Chitra : பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா

SPB : உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ம்ம்ம்
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன

Song credits:

Movie :Thalaivasal 1992
Music :  Bala Bharathi
Singers:  K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Lyrics :Vairamuthu
Starring: Anand, Sivaranjani
Director :Selva

4 comments:

Anonymous said...

ஒரு காலத்தில் அதிகம் வானொலியில் ஒலித்த பாடல் .நடிகர் ஆனந்த் பின் காணாமல் போயிட்டார்!

Anonymous said...

🇱🇰 வானொலி பொங்கும் பூம்புனலில் முன்னர் அடிக்கடி ஒலிக்கும் பாடல்.

Anonymous said...

செட்டிங்கில் ஏதோ குளறுபடி போல என்பெயர் வருகுதில்லை!))தொடர்வோம் என்றும் நட்புடன் தனிமரம்.

Riyas said...

Thank u Thanimaram anne..

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2