காலம் கடந்த கனவுகள்!


எல்லோரிடமும்
எல்லாமும்
இருக்கிறது
நல்ல மனசைத்தவிர!

ஓரே வழியாகவே
போய் வருகிறது
இயந்திர வாழ்க்கை
கடிகாரத்தை போலவே!

கணனிகளுக்குள்ளும்
கைத்தொலைபேசிகளுக்குள்ளும்
சுருங்கிவிட்டது
விருந்தோம்பல்களும்
நல விசாரிப்புகளும்.!

நினைப்பவை
கிடைப்பதுமில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை
இதுதான் வாழ்கை
விளையாட்டு!


வானம் போல்
வாழ்ந்திட நினைத்தேன்
இன்னும் கீழேதான்
கிடக்கிறேன்
பூமியாய்.!

தேடிக்கொண்டிருக்கிறேன்
இன்னும்
வாத்தியாரிடம் சொன்ன
எதிர்கால
இலட்சியங்களை.!Traffic -பரபரப்பான மலயாள சினிமா!

இது கடந்த வருட ஆரம்பத்தில் வெளியான விறுவிறுப்பான மலயாள திரில்லர் படம். அண்மையில்தான் பார்க்க முடிந்தது! பார்த்து முடிந்ததும் அட! வித்தியாசமான படமா இருக்கே என ஆச்சர்யப்பட வைத்தது. ஒரு சாதாரன கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து கொஞ்சம் கூட சலிப்படையாமல் இறுதிவரை அதே வேகத்தோடு திரைப்படத்தை நகர்த்திய விதம் அருமை.

நான்கு வெவ்வேறு நிகழ்வுகளை ஒரு கதைக்குள் கொண்டு வந்து ஓரே புள்ளியில் இணையுமாறு செய்திருக்கிறார்கள் எந்தவித குழப்பமுமின்றி.

#சித்தார்த்(ரஹ்மான்) மலயாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் குடும்பத்துக்காகவேண்டி சில நிமிடங்களைக்கூட கழிக்க முடியாமல் புதிய பட ரிலீஸ் வேலைகளை கவணித்துக்கொண்டிருக்கிறார். அதேநேரம், அவரின் 14 வயது மகள் இருதய கோளாரினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள்.

#டாக்டர் ஏபேல் திருமணமாகி ஒரு வருட பூர்த்தியில் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அந்த கோபத்தில் தன் கார் மூலம் அவளை இடித்து தள்ளிவிட்டு சென்றுவிடுகிறார்.

#ரய்ஹான்(வினித் ஸ்ரீநிவாசன்) நண்பன் ராஜீவுடன்(ஆசிப் அலி) தன் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கக மோட்டார் சைக்கிளில் செல்லும் வேளை சிவப்பு சிகனலை மீறிவந்த காரொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி தலையில் அடிப்பட்டு கொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றான்.

#ட்ராபிக் கான்ஸ்டபிள் சுதேவன்(ஸ்ரீநிவாசன்) லஞ்சம் வாங்கியதற்காக தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் வேலையில் சேர்வதற்கான் நாள் அன்று.

இதற்கிடையில் தலையில் அடிபட்ட ரய்ஹானின் மூளை செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டதால் இன்னும் சில மணிநேரமே உயிர்பிழைத்திருப்பார் என கொச்சி வைத்தியசாலை டாக்டர்கள் கூறிவிட்டனர். அதேநேரம் பாலக்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் சித்தாத்தின் மகளுக்கு இருதய மாற்று அருவைசிகிசை செய்தாக வேண்டுமெனவும் அதற்கு மாற்று இருதயம்(உயிருள்ள) அவசரமாக இரண்டு மணிநேரத்துக்குள் வேண்டுமெனவும் வைத்தியர்கள் கூறிவிட்டனர்.

கொச்சியில் கோமா நிலையில் உள்ள ஒருவர் பற்றிய தகவல் கிடைத்ததும் 14 வயது உயிருக்கு போராடும் சிறுமிக்கு இன்னும் சில மணிநேரத்தில் உயிர்விட காத்திருக்கும் ரய்ஹானின் இதயத்தை தர முடியுமா எனக்கேட்கின்றனர்.. கோமாநிலையில் இருந்தாலும் தன் மகனின் இதயத்தை உயிரோடு கொடுக்க மறுத்துவிடுகின்றனர் ரய்ஹானின் பெற்றோர். பின்பு நிலைமையை புரிந்துகொண்டு கண்ணீருடன் அனுமதி வழங்குகின்றனர்.

இன்னும் இரண்டு மனிநேரத்தில் 180 km தூரமுள்ள கொச்சியிலிருந்து பாலகாட்டுக்கு இதயத்தை கொண்டு சென்றாக வேண்டும் அந்த நேரம் விமான சேவையும் இல்லை காலநிலை மோசமானதால் ஹெலிகப்டர் சேவையையும் பெற முடியவில்லை. தரைவழிப்பயணமே ஓரே வழி! மிகவும் சனநெரிசலான பள்ளமும் மேடும் கொண்ட கேரள சாலையில் பாடசாலை விடும் நேரம் உள்ளிட்ட உச்சக்கட்ட ட்ராபிக் நேரம். 180கிமி இரண்டு மணிநேரத்தில் கடந்தாக வேண்டும். அசாத்தியமான இலக்குதான் என்றாலும் முயற்சி செய்தால் எதுவும் சாத்தியப்படலாம் என்ற நம்பிக்கையில் தரைவழிப்பயணத்தை திட்டமிடுகின்றனர்.

போலிஸ் கமிஷ்னர் (அனூப் மேனன்) ஆரம்பத்தில் இது பெரும் ரிஷ்க் பாதையில் செல்லும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாகலாம் என்று மறுத்தாலும் பின்பு அவரே முன்னின்று இத்திட்டத்தை ஆரம்பிக்கிறார்.. இந்தப்பயணத்தில் வண்டியோட்ட பலரும் மறுத்தநிலையில், லஞ்சம் வாங்கியதன் மூலம் தனக்கு கிடைத்த கெட்ட பெயரை இல்லாமல் செய்ய ட்ராபிக் கான்ஸ்டபிள் ஸ்ரீனிவாசன் இதை பொறுப்பெடுக்கிறார்.. எத்தனை வேகத்தில் சென்றால் இலக்கை சரியான நேரத்தில் அடையலாம் என சகலதும் அறிவுறுத்தப்பட்டு கொச்சியிலிருந்து பாலகாட்டுக்கான இதயத்தை கொண்டு செல்லும் பயணம் ஆரம்பமாகிறது.. பிரதான நகரங்களில் வண்டி வரும் வேளை போலிஸ் உதவியுடன் ஏனைய வாகணங்கள் நிறுத்தப்பட்டே இவர்களின் வண்டிக்கு வழிவிடப்படுகிறது. இதில் ரய்ஹானின் நண்பன் ஆசிப் அலியும் மனைவியை காரின் மூலம் இடித்துவிட்டு எப்படி தப்புவது என்றிருக்கும் டாக்டர் ஏபேலும் இதில் பயணிக்கின்றனர்..


இதன் பிறகுதான் அசுரவேகமெடுக்கிறது படம்.. 180 km ஐ இரண்டு மணிநேரத்தில் அடைந்தார்களா இல்லையா இடையில் ஏற்படும் தடைகள் என்ன சுவாரஷ்யங்கள் என்ன என்பதுதான் மீதிக்கதை. அவர்களின் அந்தப்பயணத்தில் நாமும் சேர்ந்தே பயணிப்பதை போல் உணர்வையும் ஒரு திரில் அணுபவத்தையும் தந்து செல்கிறது இப்படம். இப்படத்தில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்கள் தொழிநுடப குழுவினர்கள் தனது உழைப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். எழுத்து பொபி சஞ்சய் என்ற சகோதரர்கள். இயக்கம் ராஜேஷ் பிள்ளை.. ரய்ஹானின் பெற்றோராக சாய்குமாரும் பாத்திமா பாபுவும், காதலியாக சந்தியா, டாக்டர் ஏபேலின் மனைவியாக ரம்யா நம்பீசனும் இருக்கின்றனர்.

சென்னையில் இதேபோன்றதொரு உண்மை சம்பவம் நடந்ததாக திரைப்படத்திலேயே கூறுகின்றனர். அதுதான் இத்திரைப்படம் உருவாவதற்கான இன்ஸ்பிரேஷனும் கூட! தமிழ் இயக்குனர்கள் கதை கிடைக்காமல் அரைத்ததையே அரைத்துக்கொண்டிருக்க தமிழ்நாட்டில் நடந்த கதையை வைத்து மலயாளிகள் சிறந்ததொரு படத்தை கொடுத்துவிட்டார்கள். இது தமிழிலும் ஹிந்தியிலும் ரீமேக செய்யப்பட இருக்கிறதாம்!

முழுப்படத்தையும் யூடுப்லயே கானலாம்
http://www.youtube.com/watch?v=bqORNFBJy_A

Diamond Necklace - மலயாள சினிமா!

துபாய் கனவுலகின் சொர்க்கம்! அதை அனுபவிக்கும் பாக்கியம் சிலருக்கு மட்டும்தான். பலருக்கோ அது வெறும் பார்த்து ஏங்கிச்செல்லும் கண்காட்சிதான். சிலருக்கு அதுவே நரகம்! இந்த படத்தில் சொல்வது போல் துபாய் நகரம் என்பது ஒரு மெஜிக் போல எல்லாம் இருப்பதாய் தோன்றும் ஆனாலும் ஒன்னுமில்லை எல்லாம் மாயம்! ஊரில் வேலைக்காய் கஷ்டப்படும் இழைஞர்கள் அநேகரின் கனவு எப்படியாவது ஒரு வெளிநாட்டு வேலை கிடைத்தால் போதும், அதன்பிறகு வாழ்க்கையில் முன்னுக்கு வந்துடலாம் குடும்பத்துக்கு உதவலாம் என்பதுதான் பலரின் லட்சியம்!

ஆனால் இந்த லட்சியம்,குடும்பம்,எதிர்காலம் என்பதெல்லாம் இங்கே வந்து இங்கே கிடைக்கும் தற்காலிக சுகங்கள், நண்பர்கள, களியாட்டங்கள், கேளிக்கைகள், சொகுசான வாகணங்கள், சொகுசான வாழ்க்கை மூலமாக மறக்கடிக்கப்பட்டு உழைத்த காசெல்லாம் வீனாக்கி கடன் தொல்லைகளில் சிக்கி இறுதியில் வெறும் கையோடு நாடு திரும்பும் பலரை பார்த்திருக்கிறோம்! இவ்வாறாக துபாயில் வேலைபார்க்கும் ஒரு ஜூனியர் மலயாளி டாக்டர் தன் வருமானத்திற்கு அதிகமான சொகுசான/கேளிக்கையான வாழ்க்கையில் மூழ்கி அவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வங்கிக்க்டன்,கிரெடிட் கார்ட் என சிக்கி கஷ்டப்பட்டு பலரை ஏமாற்றி பின் திருடும் நிலைக்கே சென்று பின் தன்னையும் தன் நிலையையும் உணர்ந்து திருந்தும் கதைதான் இந்த டயமண்ட் நெக்லஸ்.

அதிகமான மலயாள திரைப்படங்களில் பிரம்மாண்டம் இல்லை, மிகப்பெரிய மாஸ் ஹீரோக்கள் இல்லை, 100 பேரை தனியாளாய் அடித்து துவைக்கும் ஹீரோயிசம் இல்லை,கவர்ச்சி குத்துப்பாட்டுகள் இல்லை ஆனால் அவற்றையும் ரசிக்க முடியும் காரணம் நல்ல (யதார்த்த) கதையும் சுவாரசியான திரைக்கதையும் இயக்கமும்தான். மசாலா சினிமா ரசிகனின் திருப்தியை இவ்வாறான படங்கள் கண்டுகொள்வதில்லை. கண்டு கொள்ளத்தேவையும் இல்லை. இது அவர்களுக்கான படமும் அல்ல! இவ்வாறான படங்களை பார்க்கும் போது தமிழில் இவ்வாறான கதைகளும் திரைப்படமாக வராதா என்ற ஏக்கம் வருவதுடன் தமிழ்சினிமா (அவ்வப்போது ஒன்றிரண்டு விதி விலக்குகளைத்தவிர) மசாலா குப்பைகளை நம் ரசனைக்குள் கொட்டி இது வரை காலமும் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது..

டாக்டராக பஹாத் பாசில் மிக அருமையான யதார்த்த நடிப்பு. இவர் தேர்வு செய்யும் கதைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை பீமேல் கோட்டயத்தில் ஒரு வில்லத்தனமான நடிப்பென்றால் இதில் டாக்டராக/காதலனாக/கனவனாக/நவநாகரீக இழைஞசனாக நடிப்பில் அசத்தியிருப்பார். தமிழ் நர்சாக கௌதமி நாயர் என்னா கண்ணு அது! மலயாள பொண்ணுங்களுக்கு மட்டும் கண்ணு இவ்வளவு பெருசா ஏன்னு தெரியல்ல? கேன்சர் நோயாளியாக சம்விருதா பெரிய டாக்டராக ரோஹினி. இவர்களுடன் டாக்டரின் வெகுளியான மனைவியாக வருபவரும் எல்லா காட்சியிலும் புன்னகைக்க வைக்கிறார் இறுதிகாட்சி தவிர! முதல் முதலாக துபாய் வந்து காருக்குள் ஏறச்சொன்னதும் காரின் டிரைவர் சீட் பக்க கதவைத்திறந்து "இவ்விட இந்தப்பக்கம் இஸ்டீரின் அல்லே" என்று வெட்கப்பட்டு "அய்யே" என அடுத்தப்பக்கம் போய் உட்காரும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!


கதை,திரைக்கதை இக்பால் குட்டிபுரம் இயக்கம் லால்ஜோஸ்.  வேறு ஒருவரின் கதை திரைக்கதைக்கு இயக்கமட்டும் செய்யும் பல இயக்குனர்களை மலயாள சினிமாவில் கானலாம்.. அப்போதுதான் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளும் திரைவடிவம் பெற ஏதுவாகயிருக்கிறது. துபாயிலும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் 20,25 ஆண்டுகள் தன் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு லேபர் கேம்பில்லே தன் வாழ்க்கையையு,இளமையையும்,கனவையும் தொலைக்கும் மலயாளிகளின் வாழ்க்கை வேதனைகளையும்,கொண்டாட்டங்களையும் காட்ட மறக்கவில்லை சில இடங்களிலாவது. காட்சியமைப்பில் அழ்கிய துபாயின் உயர்ந்த கட்டடங்களையும் சாலைகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபாவுக்கு பக்கத்திலே அதிக காட்சிகள் எடுத்திருப்பது அழகு.!

இறுதியாக மலயாளி என்றால் சுயநலம் பிடித்தவன், காசுக்காக எதையும் செய்வான, மற்றவர்களை பற்றி சிந்திக்கமாட்டான், தமிழனை கண்டாலே பிடிக்காது போன்ற நம் மனதில் பதிந்திருக்கும் கருத்துக்களை உடைக்கும் வண்ணம், இல்லை! மலயாளிக்குள்ளும் நல்ல மனசும் மனிதாபிமானமும் இருப்பதாய் உணர்த்தி படம் முடிவடைகிறது

படத்தின் பாடலொன்று துபாயின் அழகோடு!

டாக்டர்-வக்கீல்-கோழிப்பண்னை!

இயற்கை அழகு!

ஊழலில்லா எதிர்காலம் அமையுமா?

ஐன்ஸ்டீன் என்ன சொல்றார்னா..

படித்து ரசித்த இரு நகைச்சுவைகள்!

ஒரு விழாவில் டாக்டர் தன் பழைய வக்கீல் நண்பரை சந்தித்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து டாக்டரிடம் உடல் தொந்தரவு சம்பந்தமான டிப்ஸ் கேட்க அதை விளக்க வேண்டியதாகி விட்டது. இதே போல் ஐந்தாறு தடவை நிறைய பேர் வந்து கேட்க அவர்கள் பேச்சு தடை பட்டது. எரிச்சலான டாக்டர் வக்கீலிடம், "இது மாதிரி உங்களிடம் சட்ட சம்பந்தமான விளக்கம் கேட்டால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.
அவர் உடனே, "விளக்கம் சொல்வேன், ஆனால் மறு நாள் கன்சல்டண்ட் பீஸ் 100 ரூபாய் பில் அனுப்பி விடுவேன்" என்றார்.!

கொஞ்சம் தர்மசங்கடமாக உணர்ந்த டாக்டர் அன்று முழுக்க யோசித்து டிப்ஸ் கேட்டவர்களுக்கு மறு நாள் பில் அனுப்ப முடிவு செய்தார்.
மிகவும் யோசனையோடு சென்றவர், வேண்டாமென்று முடிவு செய்து திரும்பினார்.

அங்கே தபால் பெட்டியை திறந்து பார்த்தபோது கன்சல்டண்ட் பீஸ் 100 ரூபாய்க்கான பில் வக்கீலிடமிருந்து வந்திருந்தது!


ஒரு கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.

மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.

மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்.

இரண்டாவது நகைச்சுவையை படிக்கும் போது சத்தம் போடாதே படத்திலிருந்து பிரேம்ஜியின் நாய்க்காமெடி ஞாபகம் வருகிறதா..? வரவில்லையென்றால் அதைப்பாருங்கள்..

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி          நல் வாழ்த்துக்கள்!!

படங்கள் சொல்லும் கதைகள்..1

ஐந்தறிவு கொண்ட மிருகங்களிடமும் நட்பு என்ற உறவும் நன்றி,பாசம்,அன்பு என்ற உணர்வுகளும் இருக்கவே செய்கிறது!


இன்றைய கனனியுகத்தில் சிறுவர்களின் விளையாட்டென்பது வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டது! இந்தப்படத்த பாருங்க "வெளியில போய் விளையாடு" என்று சொல்லப்பட்டதும் இவன் வெளியிலபோய் எப்பிடி விளையாட்றான் பாருங்க..!


வெளியில் ஆணாதிக்கவாதி என குற்றஞ்சாட்டப்படும் பல ஆண்களின் மறைக்கப்படும் மறுபக்கம்!

பயபுள்ளங்க குளிச்சி நாளாகுது அதுதான் குளிக்கவெச்சு காயப்போட்டாச்சு!

காய்கறி கடை எப்பூடி!!

உலகையே தன்னிடத்திற்க்கு இழுத்துச்செல்லும் ஆற்றலுண்டு எறும்புக்கு!

படிக்கிறதுக்கு இதுதான் சரியான இடம்!

காதல் புறாக்கள்!!

இந்த புகைப்படத்தை தயார் செய்தவருக்கு முதலில் எனது சல்யூட்.. எவ்வளவு அழகான உண்மை இது.. வீட்டில் குழந்தைகளுக்கு எவ்வளவுதான் விளையாடுவதற்கு பொருட்கள் இருந்தாலும்! படிக்கும் குழந்தைகளின் புத்தகங்களும் பேனாக்களும்தான் அவர்களுக்கு விளையாட தேவைப்படும்.. அதேபோன்றதொரு நிலைமைதான் இந்த அக்காவுக்கும் தம்பி மூலம் ஏற்பட்டிருக்கு..! நம்மில் பலரும் இது போன்ற அழகான அவஸ்தைகளை கடந்து வந்திருப்போம்!!


ஓய்வெடுக்கும் குதிரை!

பகல் சாப்பாடு கிடைச்சிருச்சி..

இந்த பயபுள்ளங்களை கட்டி மேய்க்கிறதுக்குள்ள தாவு தீர்ந்து போயிடுதே!

பாட்டி வடை சுட்ட கதையின் நாயகி இந்தப்பாட்டியாத்தான் இருக்குமோ!

ஆப்ரிக்கன பிரேட்!!

பதிவை பார்த்து முடிச்சிட்டிங்களா இதுல கொஞ்சம் ஓய்வெடுத்திட்டு போங்க!


பாட்டில் ஈ பாட்டில் இனியும் நீ உணரில்லி!ஆ....அ...ஆ...ஆ..அ அ
பாட்டில் ஈ பாட்டில் இனியும் நீ உணரில்லி
ஒரு ராப்பாடி பாடும் மேளம் கேட்டதில்ல
பனி நீர் பூக்கள் சூடி ராவுறங்கியில்லே
என் நெஞ்சில் ஊரும் ஈ பாட்டில் இனியும் நீ உணரில்லி

ஆ....அ...ஆ...ஆ..அ அ

சாகரம் மாரில் ஏட்டும் கதிரோன் வீனிரிஞ்சு
காதரே நிண்டே நெஞ்சில் எரியும் சூரியன் ஆரோ
கடலல தொடுனிறமாரின்னு
கவிலிலும் அருனிமா பூத்துவோ
பிரனயமொறசுலப மதுரமாம்.. நிர்வ்ரிதி!

ஒழுகும் பாட்டில் ஈ பாட்டில் இனியும் நீ உணரில்லி

ஆயிரம் பொன் மயூரம் கடலில் நிர்த்தமாடும்
ஆயிரம் ஜுவாலயாய் கதிரோன் கூடி ஆடும்
பகலொளி இரவின வீழ்க்குமே.. புகிலுகள் பறவகள் வாழ்த்திடும்
பிரனயமொறசுலப மதுரமாம்.. நிர்வ்ரிதி!

ஒழுகும் பாட்டில் ஈ பாட்டில் இனியும் நீ உணரில்லி
ஒரு ராப்பாடி பாடும் மேளம் கேட்டதில்ல
பனி நீர் பூக்கள் சூடி ராவுறங்கியில்லே

அதிசயம் + அழகு இயற்கை மரங்களின் படத்தொகுப்பு.!


இயற்கையின் பிள்ளைகளான வித விதமான ஆச்சர்யமான மரங்களின் படத்தொகுப்பு - Photos Gallery!

Song lyrics

Tamil,Sinhala,Hindi Song Lyrics