தொலைதூரம் நோக்கிய ஓர் பயணம்....
பல கோடி பயணிகள்...
பல்லாயிரம் பாதைகள்...
எல்லாம் ஓரிடம் நோக்கியே...
வந்தவர்கள் வாழ்ந்தார்கள் சென்றார்கள்...
வருகிறார்கள் வாழ்கிறார்கள் செல்கிறார்கள்...
வருவார்கள் வாழ்வார்கள் செல்வார்கள்..
வருவதும் வாழ்வதும் போவதும்...
இயல்புதானே வாழ்க்கையின்...
பேரூந்து பயணத்தில் ஜன்னல் வழியே...
காட்சிகள் ரசிக்கும் குழுந்தையாய் நாம்...
வாழ்க்கைப்பயணத்தில்...
எத்தனை மனிதர்கள்...
எததனை நிறங்கள்...
எத்தனை மாற்றங்கள்...
எத்தனை தோற்றங்கள்...
கடந்து போகிறோம் காலகாலமாய்...
எங்கே போனான் என்னவானான்..
ஆடையின்றி வாழ்ந்த ஆதிமனிதன்..
எங்கே போவான் என்னவாவான்..
நவயுக நாகரீக் மனிதன்...
பாதைகள் மாறலாம்...
பயணங்கள் தொடரும்..
ஓரிடம் நோக்கியே.....
என்ன் குழப்பிட்டேனா ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு
போங்க... மக்கள்ஸ்
17 comments:
ஜில்லுன்னு இருக்கு ரியாஸ்...
//பேரூந்து பயணத்தில் ஜன்னல் வழியே...
காட்சிகள் ரசிக்கும் குழுந்தையாய் நாம்...
வாழ்க்கைப்பயணத்தில்...
//
இந்த வரிகள் சூப்பர் ..!!
//
என்ன் குழப்பிட்டேனா ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு
போங்க... மக்கள்ஸ்//
சுடு தண்ணி மாதிரி தெரியுது ..?!?
என்ன மக்கா தண்ணி இவ்வளவு ஜில்லுன்னு இருக்கு ...
கவிதை அருமை...
கவிதையும், தண்ணியும் அருமை ரியாஸ்!!
வந்தவர்கள் வாழ்ந்தார்கள் சென்றார்கள்...
வருகிறார்கள் வாழ்கிறார்கள் செல்கிறார்கள்...
வருவார்கள் வாழ்வார்கள் செல்வார்கள்..///
நிறைய அர்த்தம் இருக்கிறது நண்பரே இதில்!
ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு
போங்க... ....Thank you very much. :-)
@@@வினோ..
வாங்க வினோ வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
@@@ப.செல்வகுமார்
வாங்க செல்வா வருகைக்கும் உங்கள் தொடர் ஆதரவிற்கும் நன்றி..
@@@வெறும்பய..
வாங்க வெறும்பய உங்கள் வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி
@@@சைவகொத்துபரோட்டா
வாங்க சார் உங்கள் வருககைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி
@@@அண்ணாமலை
வாங்க சார் உங்கள் முதல் வருகைகும் கருத்திற்கும் மகிழ்ச்சி பின் தொடர்ந்தமைக்கும் நன்றி
கவிதை கூல் கூல்...
///...வந்தவர்கள் வாழ்ந்தார்கள் சென்றார்கள்...
வருகிறார்கள் வாழ்கிறார்கள் செல்கிறார்கள்...
வருவார்கள் வாழ்வார்கள் செல்வார்கள்...///
அருமை சகோதரா ஒரு மரம் பறவைகளைப் பார்த்தும் இப்படித்தான் சொல்லும்...
அசத்தலா இருக்கு பாஸ். வாழ்க்கையில் ஏதும் நிரந்தரமில்லைன்னு அழகா சொல்லியிருக்கிங்க.
ஜில் தண்ணிக்கு நன்றி :)
சரியாகச் சொன்னீர்கள்... வாழ்க்கை ஓட்டமே இப்படித்தானே...
கவிதை எளிமையா எந்த ஒரு புரியாதபடி இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் அருமையா இருக்குது!
வாழ்த்துக்கள்!
கவிதை ஜில்லுனு அருமையாக இருக்கு
யதார்த்தமா எழுதுறீங்க.... ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்வை ஆழ அலசிப் பார்த்தால் வெறுமையும் வெறுப்பும்தான் ரியாஸ்.தண்ணீர் குடித்தே ஆற்றவேண்டும் வெக்கையை.
Post a Comment