மனம் கவைந்த மலயாள சினிமா..1

மத்திய கிழக்கு வேலைக்கு வந்தபிறகே மலயாள மொழி பற்றிய புரிதலும் அம்மொழிசார்ந்த படங்களை பார்க்கும் ஆர்வமும் மேலோங்கியது. எத்தனை அருமையான சினிமாக்களை படைத்திருக்கிறார்கள். நல்ல சினிமாக்களை தேடிப்பார்க்கும் என் பசிக்கு நல்ல விருந்தாகின அவைகள்! யதார்த்தமான சூழலில் உருவான கதைகள்,ஹீரோயிசம் காட்டாத நிஜமான நாயகன் மற்றும் மனிதர்கள், கிராமியச்சூழல் இதுவே என்னை பெரிதும் ஈர்த்தது மலயாள திரைப்பக்கம்! அன்றிலிருந்து நான் இதுவரை பார்த்ததில் என்னை மிக கவர்ந்த பல மலயாளப்படங்களை சிறு குறிப்புடன் தொடர்ந்து பகிர நினைக்கிறேன் அதன் முதல் பாகமே இது.  என் மனதில் என்றைக்கும் மறவாமல் இருக்கும் திரைப்படங்களை இங்கு பதிந்து வைக்கும் முயற்சியே இது. விரும்பாதவர்கள் இத்துடன் தவிர்ந்துகொள்ளலாம்.!

Samantharangal (1998) சமாந்தரங்கள்.


இந்திய சினிமாவில் இஸ்லாமியர்களை நல்லவர்களாகவே காட்ட மாட்டார்களா என அங்கலாய்ப்போர் பார்த்து ஆசுவாசப்படவேண்டிய படம் முழுக்க இஸ்லாமிய கதாபாத்திரங்களைக்கொண்ட படம். கேரளாவில் வாழ்ம் ஒரு ஏழை இஸ்லாமிய குடும்பத்தின் கதை எனவும் சொல்லலாம்.! இஸ்மாயில் என்ற மிகநேர்மையான ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரைச்சுற்றியும் அவரது பிள்ளைகள், ஏழ்மையான குடும்பம், உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், இழப்புகள், பொருளாதார பிரச்சினைகள என ஒரு குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையாகவே காட்டியுள்ள மிக அற்புதமான யதார்த்த மலயாள சினிமா. எந்தயிடத்திலும் மசாலா சினிமாவின் சின்னத்தனங்கள் கிடையாது. உலகம் போற்றுகின்ற ஈரான் சினிமாக்களோடு வேண்டுமானாலும் இதை ஒப்பிடலாம்.
போகிற போக்கில் ஒரு சிலரின் சுயலாபத்திற்காக கம்யூனிசத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம்,கடையடைப்பு,இளைஞர்கள் மனதைக்கெடுத்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவோரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டுள்ளது. இயக்கம்.தயாரிப்பு பாலச்சந்திரமேனன். நடிப்பும் அவரே இஸ்மாயில் என்ற மனிதராகவே வாழ்ந்திருப்பார். அதற்கான பரிசாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் சிறந்த சமூக குடும்ப படத்துக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

யூடுப்ல கான சமாந்தரங்கள்.

Chinthavishtayaya Shyamala (1998) சிந்தவிஷ்டயாய ஷ்யாமளா

போதையானாலும் ஆன்மீகமானாலும் அளவுகடந்து போவது குடும்ப/சமூக  வாழ்க்கைக்கு தீங்கானது என்ற கதையைக்கொண்ட மிக அருமையான திரைப்படமாகும். இரன்று பிள்ளைகள் இருக்கத்தக்க வேலைக்குச்செல்லாமல் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு திரியும் ஒருவரை, குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக ஆன்மீக பயணம் ஒன்றுக்கு அனுப்ப அதன் பிறகு முழுநேரமும் ஆன்மீகவாதியாய் மாறி இறுதியில் வீட்டைவிட்டே வெளியேறி மடத்தில் தங்கி விடும் நிலைக்கே வந்துவிடுகிறார்.. இதன்பின் தன்னிலை அறிந்து எப்படி திருந்துகிறார் என்பதை மிக அருமையாக நகைச்சுவை கலந்து சொன்ன படமிது. திரைக்கதை இயக்கம் நடிப்பு ஸ்ரீனிவாசன்.  இவரின் திரைக்கதையமைப்பிதில் பல அருமையான திரைப்படங்களை மலயாள திரையுலகிற்கு கொடுத்தவர். அப்பாவாக திலகனும் மனைவியாக சங்கீதாவும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இப்படம் பல விருதுகளையும் பெற்றுக்கொண்டது.1998 ம் ஆண்டிற்கான தேசிய விருது உட்பட!

யூடுப்பில் கானலாம்..

Melparambil aanveedu (1993) மேல்பரம்பில் ஆண்வீடு



இது ஒரு குடும்ப காமெடி கலாட்டா நகைச்சுவை படம் ஜெயராம் வேலைக்காக வேண்டி தமிழ்நாட்டுக்கு வந்து அங்கே தமிழ்பெண்ணான சோபனாவை காதலித்து கல்யாணம் முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார். பிறகு சோபனாவை மனைவியாக வீட்டுக்கு கூட்டிச்சென்றால் பிரச்சினையாகிவிடும் என்ற காரணத்தால் கொஞ்சநாளில் சமாளித்து விடலாம் என்று கூறி தற்காலிகமாக வேலைக்காரியாக அழைத்துசெல்கிறார். ஜெயராமின் இரு சகோதரர்களுக்கும் ஏற்கனவே கல்யாணமாகாததால் சோபனாவை அவர்களிருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் கலாட்டக்கள் அதகளம் சகோதரர்களில் ஒருவராக ஜகதி. பின்பு ஒரு நெகிழ்வான சம்பவத்துடன் முடியும் ஒரு பீல் குட் திரைப்படம் இது. ஜெயராமின் அம்மா புட்டுச்சுட வைத்திருந்த மாவை எடுத்து வீட்டு முற்றத்தில் சோபனா கோலம் போடும் காட்சி மிக அருமையான நகைச்சுவை. இயக்கம் ராஜசேனன். மலயாள மொழி தெரிந்தால் நல்ல பொழுது போக்கு நிச்சயம்.

 யூடுப்பில் கானலாம்

2 comments:

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

தனிமரம் said...

நல்ல விடயத்தை தொடராக பதிவு செய்வது சாலச்சிறந்தது ரியாஸ் நல்ல படைப்புக்கள் பல மலையாளத்தில் கொட்டிக்கிடக்குது தொடர்ந்து நீங்கள் ரசித்தவையை பகிருங்கள் நானும் நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழ்கின்றேன் .இதில் ஒன்றான சி.சியாமாளா தமிழில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியாக நகலாக வந்து சென்றது தமிழில்!

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...