March 27, 2011

மீண்டுமொரு கிரிக்கெட் யுத்தம்...!


பத்தாவது உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பித்து அரையிறுதி போட்டிகள் வரை வந்துவிட்டது. அரையிறுதி போட்டிகளுக்குள் மூன்று ஆசிய அணிகள் தெரிவாகியிருப்பது சந்தோஷமே.இந்தியா,இலங்கை,பாகிஸ்தான் ஆகிய இந்த அணிகள் ஏற்கனவே ஒவ்வொரு முறை உலகக்கோப்பையை வென்று இரண்டாவது முறை கைப்பற்றும் முனைப்போடு களமிறங்குகின்றன. மற்றைய அணியான நியுசிலாந்து தென்னாபிரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.
அரையிறுதிப்போட்டிகளுக்கு வரமுடியாமல் தோற்ற அணிகளை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக மூன்று தடவை சம்பியனாகிய அவுஸ்திரேலியா அணி இம்முறை இந்தியாவால் வெளியேற்றப்பட்டது. எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என பொண்டிங்க சதமடித்து போராடினாலும் ஏனையவர்களின் போராட்டக்குணம் தளர்ந்து போனதால். முக்கியமாக சேன் வொட்சன்,கெமரன் வைட்,மைக் ஹசி போன்ற அவுஸ்திரேலியாவை சரிவிலிருந்து தூக்கி நிறுத்துபவர்கள் ஆசிய ஆடுகளங்களில் சாதிக்கமுடியாமல் போனமை,சுழல் பந்துவீச்சு பலமின்மை சேன் வோனுக்குப்பிறகு நல்லதொரு சுழல்பந்துவீச்சு இல்லாதகுறை இதில் நன்றாகவே தெரிந்தது.பிரட் லீ,சோன் டைட்,மிச்சல் ஜோன்சன ஆகியோரால் எதிரனி துடுப்பாட்ட வீரர்களை பயமுறுத்த முடியாமல் போனமையே ஆஸியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
இவ்வளவு நாளும் துரதிஷ்டங்களால் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருந்த தெண்ணாபிரிக்கா அணி. இம்முறை யாருமே எதிர்பார்க்காத வகையில் நியுசிலாந்தினால் வெளியேற்றப்பட்டது பரிதாபமே. இவர்கள் திறமையானவர்கள்தான் ஆனால் முக்கியமான போட்டிகளில் அல்ல என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துவிட்டார்கள்.இந்த தோல்விக்கு அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களே மிக முக்கிய காரணம். ஆபிரிக்காவின் உலகக்கோப்பை கனவுக்கு இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்து இலங்கையால் அடித்து துரத்தப்பட்ட இங்கிலாந்து அணி. தோற்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும். போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இவ்வளவு மோசமாக ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாமல் அவமானகரமாக தோற்கும் என எதிர்பார்க்கவேயில்லை.இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய வீரர்களின் காயமும் பந்துவீச்சு பலமின்மையுமே முக்கிய காரணம்.ஆனாலும் ஜொனதன் ரொட்டின் தொடர்ச்சியான பெறுபேறு அபாரம். ஒரு நாள் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலுமே சிறப்பான நேர்மையான துடுப்பாட்டம். மீண்டுமொரு மைக்கல் பெவன் என்றே சொல்லலாம்.
அடுத்தது மேற்கிந்திய தீவுகள். கிரிக்கெட்டின் ஜாம்பவான் களான கிளைவ் லொயிட்,விவ் ரிச்சட்ஸ்,கெரி சோபர்ஸ்,கொட்னி வோல்ஸ்,அம்ரூஸ்,லாரா இன்னும் பலர் விளையாடிய கிரிக்கெட் நாட்டிலிருந்து வந்தவர்களா இவர்கள் எனும் நிலையில் எரிச்சலடைய வைக்கிறது அந்த அணியின் விளையாட்டு. நமக்கே இப்படி என்றால் அநநாட்டு மக்களுக்கு எப்படியிருக்கும். அரையிறுதி போட்டிகளிள் மோதும் அணிகளைப்பற்றி பார்தோமானால் நியுசிலாந்து அணியினால் இலங்கையின் பந்துவீச்சை சமாளிப்பது கடினம் என்றே தோன்றுகிறது. இலங்கை துடுப்பாட்ட வீரர்களும் முழுத்திறமையுடனிருப்பதால். இலங்கை இறுதிப்போட்டிக்கு பிரவேசிக்கும் என்றே நம்பலாம். நியுசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் கைகொடுத்தால் அவர்களாலும் முடியும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு பிரவேசிக்க.

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் போட்டி புதங்கிழமை நடைபெறவுள்ள இந்தியா பாகிஸ்தான் மோதல். உள்நாட்டு குழப்பங்களால் சொந்த நாட்டில் விளையாடமுடியாத நிலை, ஆட்ட நிர்ணய சதியினால் மூன்று முக்கிய வீரர்கள் நீக்கப்படடமை, அணியிற்குள் பிளவு, ஸ்திரமில்லாத துடுப்பாட்டம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்த பாகிஸ்தான். இவ்வளவு தூரம் வந்ததே பாராட்டக்கூடியதே.இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒரேயொருவரின் அயராத முயற்சி,உத்வேகம் அவர்தான் தலைவர் சஹீட் அப்ரிடி. போட்டித்தொடரில் கூடுதல் விக்கெட்டுக்களான 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருக்கிறார்.அதைவிட அவரின் தலைமைத்துவம் மிகச்சிறப்பு ஒவ்வொரு வீரரையும் உற்சாகப்படுத்துவதும், ஆக்ரோசப்படுத்துவதும் புதிய யுக்திகளை கையாள்வதும் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளது. உமர் குல் வேகப்பந்துவீச்சும் அச்சுறுத்தலாகவே இறுக்கும்.துடுப்பாட்ட வரிசை ஹபீஸ்,அக்மல்.சபீக்,மிஸ்பா,யூனுஸ்,உமர்.ரஸ்ஸாக் என பலமானவையே.. வென்றேதீரவேண்டும் என வெறியோடிருக்கும் பாகிஸ்தான் அணி இந்திய மிகச்சவாலாகவே இருக்கும் என நம்பலாம்.
அடுத்த இந்திய அணியை பொருத்தமட்டில் மிகப்பலமான துடுப்பாட்ட வரிசையுடன் இருக்கிறார்கள். எல்லோரும் போமில் இருப்பது மிகப்பெரும் பலமே. முக்கியமாக சச்சின்,சேவாக்,கம்பீர்.யுவராஜ் அசுரர்களாக இருக்கிறார்கள். இப்போட்டி சச்சினுக்கும் மிக முக்கிய போட்டியாக அமையலாம். காரணம் எவ்வளவுதான் சாதனைக்கு மேல் சாதனை படைத்தாலும் அவர் விளையாடிய காலத்தில் ஒரு உலகக்கோப்பையேனும் நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க இது அவருக்கான இறுதி சந்தர்ப்பம்.பந்துவீச்சில் சஹீர்கான் மிகச்சிறப்பாக வீசிக்கொண்டிருக்கிறார். ஹர்பஜன்,முனாப் படேல்,யுவராஜ் ஆகியோரும் ஓரளவு பங்களிப்பை வழ்ங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.சொந்த நாட்டில் விளையாடுவதால் இந்தியாவுக்கு அதிகளவு அழுத்தம் பிரயோக்கிக்கப்படலாம். உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை பல முறை தோற்கடித்திருந்தாலும் இந்திய மைதானங்களில் மிகச்சிறப்பாக விளையாடக்கூடியது பாகிஸ்தான் அணி. 23 வருடங்களின் பின் மீண்டுமொரு உலக்க்கோப்பையை எதிர்பார்த்தவண்ணம் அதுவும் சொந்த நாட்டில் வைத்து. இது மிகப்பெரும் வாய்ப்பு இந்திய அணிக்கு. இரண்டு நாடுகளின் அரசியல் குரோதவிரோதங்களை மறந்து ஜஸ்ட் விளையாட்டாக ரசித்தால் நல்லதொரு போட்டியை கண்டுகளிக்கலாம்..

படங்கள்.Cricinfo.com

7 comments:

நிரூபன் said...

இந்த முறை இலங்கையும், இந்தியாவும் தான் இறுதிப் போட்டிக்கு வரும் என ஊகிக்கிறேன்.

ஆஸ்திரேலியா.. கடந்த இந்தியாவுடனான போட்டியில் பொன்ரிங் போலிங்கிற்காக ஏழு பேரைப் பயன்படுத்தியும் விக்கற் விழுத்த முடியாமல் றண் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பிரட்லி... அகலப் பந்து வீசியே அதிக ரன்களைக் கொடுத்திருந்தார்.

தென்னாபிரிக்காவின் கனவு நனவாமும் எனும் எண்ணத்தில் வெயிற்றிங்.
நடை முறை ஆட்டங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட உங்களின் அலசல் அருமை.

asiya omar said...

அருமையான விமர்சனம்,பகிர்வுக்கு நன்றி.

பதிவுலகில் பாபு said...

மிக அருமையான விமர்சனம் நண்பா..

இந்தியா வெல்லும்..

அந்நியன் 2 said...

இந்தியா ஜெயிப்பதைத்தான் ஒவ்வொரு இந்தியனும் மனதார நினைப்பார்கள்.

கிரிக்கெட்டைப் பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது ஆனால் இன்ஷா அல்லாஹ் இந்தியாதான் ஜெயிக்கும்.

100%

வீராங்கன் said...

//ஹர்பஜன்,முனாப் படேல்,யுவராஜ் ஆகியோரும் ஓரளவு பங்களிப்பை வழ்ங்குவார்கள்//

அ து ................. சரி.,

Chitra said...

இரண்டு நாடுகளின் அரசியல் குரோதவிரோதங்களை மறந்து ஜஸ்ட் விளையாட்டாக ரசித்தால் நல்லதொரு போட்டியை கண்டுகளிக்கலாம்..


... :-)

சே.குமார் said...

அருமையான விமர்சனம்,பகிர்வுக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...