July 06, 2010

முடியல்லயே...!

எனது கணனியில் ஏற்பட்ட குளறுபடியால் இரண்டு மூண்று நாட்களாக நிறையப்பேரின் வலைப்பூக்களுக்கு வரவோ.. பின்னூட்டமிடவோ.. ஓட்டுப்போடவோ முடியவில்லை.. எல்லோரும் மன்னித்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.. அலுவலகத்தில் அவ்வப்போது கிடைக்கும்  நேரத்தில் வந்து எட்டிப்பார்த்துவிட்டு ஓடி விடுகிறேன்.. இப்போதுகூட மதிய உணவு இடைவேளையின் போது கிடைத்த அரை மணி நேரத்திலே இந்த குட்டி பதிவு..

சரி வந்ததுதான் வந்துட்டம் ஒரு குட்டி ஜோக்கு... சிரிப்பு வராட்டி திட்டக்கூடாது ஆமா....
மூண்று கோடீஸ்வரர்கள் ஒரு அமெரிக்கர் ஒரு அரேபியர் ஒரு ஜப்பானியர். ஒரு கப்பலில் தன் வேலையாட்களுடன் நடுக்கடலில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். திடிரெண்டு கப்பல் மாலுமியிடமிருந்து ஒரு அறிவித்தல். கப்பலில் ஏற்பட்ட கோளாரின் காரணமாக கப்பல் மூழ்கும் நிலையிலுள்ளதாகவும். அவசரமாக பக்கத்தில் உள்ள துறைமுகம் ஒண்றுக்கு செல்ல வேண்டும் எனவும். அவ்வாறு செல்வதாயின் கப்பலில் தேவைக்கு அதிகமாகவுள்ள பாரமான பொருடகளை கடலில் போடும்ப்டி அறிவுறுத்தப்பட்டது.. கப்பலில் பாரத்தை குறைப்பதனால் மூழ்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம் என்ற நோக்கில்..

இதைக்கேட்டதும் உடனே அமெரிக்கர் தன்னிடமுள்ள துப்பாக்கிகள்,ஆயுதங்கள் அனைத்தையும் கடலில் தூக்கிப்போட்டுட்டு கூறினார்.. இது எங்க நாட்ல அளவுக்கதிகமாகவே இருக்கு அதனால இது தனக்கு தேவையில்லை என்று.. அடுத்ததாக ஜப்பானியர் தன்னிடமுள்ள இலத்திரனியல் உபகரணம் அனைத்தையும் தூக்கிப்போட்டுட்டு கூறினார் இது எங்க நாட்ல தாராளமாகவே கிடைக்குது இதெல்லாம் தனக்கு தேவையில்ல என்று சொன்னார்.. அடுத்ததாக அரேபியர் அவங்க ரெண்டு பேரும் போட்டுட்டாங்க நாம எதை தூக்கிப்போடுறது என்ற குழப்பத்தில் நாலா புறமும் பார்த்துட்டு. யாரும் எதிர்பார்க்காத வகையில் தன் பக்கத்தில் இருந்த வேலையாளான மலையாளியை தூக்கிப்போட்டுவிட்டார்.. போட்டுட்டு சொன்னார்.. இவங்க எங்க நாட்டுல தாராளமாகவே இருக்காங்க.. அதனால இவன் எனக்கு தேவையேயில்ல..


நகைச்சுவைக்காக மட்டும்.... மத்திய கிழக்கு வாழ் மலையாள சகோதரர்களே மன்னிச்சிடுங்கப்பா

29 comments:

NIZAMUDEEN said...

ம்ம்ம்...
நகைச்சுவைக்காக மட்டும் கதை.
மறுபடியும் படிக்க வைத்ததற்கு நன்றி.
பத்தி பிரித்து போடலாம்தானே?

நாடோடி said...

ஆஹா .... யாருப்பா அது சேட்டாவோ... ரியாஸுக்கு ஒரு ஆட்டோ ரெடி ப‌ண்ணுங்க‌ப்பா.. ஹி..ஹி..

ஜீவன்பென்னி said...

சேட்டன்கள் சார்பாக இதை வன்மையாக..........

கதை நல்லாத்தான் இருக்கு.

ஜெய்லானி said...

ஏன் கண்ணூக்கு என்ன ஆச்சி. பாருங்க ..

சிரிப்ப்பூஊஊஊஊஊஊஊ

அக்பர் said...

இப்படி இக்கட்டான சூழல்ல மாட்டி விட்டுட்டிங்களே ரியாஸ்

Anonymous said...

Hahaha. but there are typing errors


மூன்று, திடீரென்டு, ஒன்றுக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

இவங்க எங்க நாட்டுல தாராளமாகவே இருக்காங்க.. அதனால இவன் எனக்கு தேவையேயில்ல..
//

நல்லா சிரிச்சேன்

ஹேமா said...

ரியாஸ்...நேற்று கவலையா எழுதியிருக்கீங்கன்னு சொன்னதுக்காகவா !
கவனமப்பு..உங்களையும் தூக்கிப் போடப்போறாங்கள் !

Chitra said...

நாயர் டீ கடையில இருந்து யோசிச்சீங்களா? ha,ha,ha,ha...

Riyas said...

// NIZAMUDEEN said...
ம்ம்ம்...
நகைச்சுவைக்காக மட்டும் கதை.
மறுபடியும் படிக்க வைத்ததற்கு நன்றி.
பத்தி பிரித்து போடலாம்தானே//

வாங்க நிசாமுதீன்.. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. பந்தி பிரித்துட்டா போச்சு..

Riyas said...

// நாடோடி said...
ஆஹா .... யாருப்பா அது சேட்டாவோ... ரியாஸுக்கு ஒரு ஆட்டோ ரெடி ப‌ண்ணுங்க‌ப்பா.. ஹி..ஹி//

ஆஹா.. ஆட்டோவா.. நாடோடி சார் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Ananthi said...

hahaha.. :D :D

nalla irukku

rk guru said...

இந்த அரமணி நேத்துல நீங்க உங்க வேலைய பார்த்திருக்கலாம்...கத சொல்றேன்னு காதை கடிட்சிட்டிங்க...மன்னித்து கொள்ளவும் காதை மொக்கை...

Riyas said...

வாங்க ஜீவன்பென்னி.. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

Riyas said...

// ஜெய்லானி said...
ஏன் கண்ணூக்கு என்ன ஆச்சி. பாருங்க ..

சிரிப்ப்பூஊஊஊஊஊஊஊ //

இனைய கெனக்சன்லதான் ஏதோ சிக்கல்.. இப்ப கூட ஆபிசிலிருந்துதான்.. இன்னும் வரல்ல மேனேஜர்.. அதுவரை பிளாக்கில் விளையாடலாம்.. யாரும் சொல்லிடாதிங்கப்பா

Riyas said...

வாங்க அக்பர்..

வாங்க அனாமிகா துவாரகன்..

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Riyas said...

// ப்ரியமுடன் வசந்த் said...
இவங்க எங்க நாட்டுல தாராளமாகவே இருக்காங்க.. அதனால இவன் எனக்கு தேவையேயில்ல..
//

நல்லா சிரிச்சேன்// சிரியுங்கோ.. நன்றி வசந்த்

Riyas said...

//ஹேமா said...
ரியாஸ்...நேற்று கவலையா எழுதியிருக்கீங்கன்னு சொன்னதுக்காகவா !
கவனமப்பு..உங்களையும் தூக்கிப் போடப்போறாங்கள் ! //

வாங்க ஹேமா அக்கா.. நீங்க வேற பயத்த கிளப்புரிங்க பக்கத்துல வேல பார்க்கிற எல்லாரும் சேட்டன்மாருதாங்க்கோ..

வருகைக்கு நன்றி

Riyas said...

// Chitra said...
நாயர் டீ கடையில இருந்து யோசிச்சீங்களா? ha,ha,ha,ha... //

எப்புடி சித்ரா அக்கா.. கண்டுபுடிச்சிட்டிங்களே..

Riyas said...

// rk guru said...
இந்த அரமணி நேத்துல நீங்க உங்க வேலைய பார்த்திருக்கலாம்...கத சொல்றேன்னு காதை கடிட்சிட்டிங்க...மன்னித்து கொள்ளவும் காதை மொக்கை... //

ரொம்பவே கடிச்சிட்டேனா மன்னிச்சிடுங்க.. நன்றி குரு

ஆனந்தி உங்க வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான சுவை மலையாளிதான் தூக்கியும் போட்டவனாயிருக்கணும்

இளம் தூயவன் said...

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு கோபம் மலையாளிகள் மீது இருக்க கூடாது. நல்லா இருக்கு.

ரஹ்மான் said...

மலையாளிகள் உஷாராயிற்றே............

சௌந்தர் said...

உண்மையா முடியலை.....

Terror Pandiyan - (VAS) said...

//மலையாளியை தூக்கிப்போட்டுவிட்டார் //

ஹி ஹி ஹி நீங்க கடலை தூக்கி போட்டாலும் நம்ப மலையாளிஸ் பொழச்சி அங்கேயே பிசினஸ் நடத்துவாங்க.... அவ்வளோ டலேன்ட் பா.....

Jey said...

nice:)

ஷ.மரிக்கார் said...

sooper yya kalakiteenge

மங்குனி அமைச்சர் said...

நாயரே இந்தப்பக்கம் கொஞ்சம் வந்து போங்க (அப்பாடா கோத்துவிட்டாச்சு )

Riyas said...

// மங்குனி அமைச்சர் said...
நாயரே இந்தப்பக்கம் கொஞ்சம் வந்து போங்க (அப்பாடா கோத்துவிட்டாச்சு )//

ஏன் அமைச்சரே இந்த வேல.. ஒருத்தன் அடிபட்றத பார்க்க ஆர்வமாத்தான் இரிக்கிங்க.. அதுதான் நாலா பக்கமும் பாதுகாப்பு போட்டிருக்கேன் சில சேட்டங்கள் என்னை தேடுவதாக தகவல் வந்திருக்கி..

Related Posts Plugin for WordPress, Blogger...