July 11, 2012

நான் ஈ அட.. அடடடடா.. 200 வது பதிவு!


இந்தப்படத்தைப்பற்றி பெரும்பாலான பதிவர்கள் எழுதி புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.. நான் என்ன அதற்கு மேலதிகமாக சொல்லக்கிடக்கு.. ஆனாலும் எனது பங்கிற்கு சில என மனதிலிருந்து, ஒரு சாதாரன வலைப்பதிவு வைத்திருப்பவன் மற்றும் சினிமா ரசிகன் என்றவரையில்!இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே இவ்வகை நிறைய fantasy & Graphics படங்களை பார்த்த நமக்கு தமிழில் இவ்வகை படம் ஒன்று வந்திருப்பது புது அனுபவம் மற்றும் மகிழ்ச்சிதான்.. எல்லோருக்கும் போலவே இப்படம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது.. பொதுவாக fantasy &Graphics ஆங்கில படங்களை நான் ரசிப்பது குறைவு ஆனாலும் இந்தப்படம் என்னை ரசிக்க வைத்தது..

தன்னை கொன்றவனை பழிவாங்குவதற்காகவும், தன் காதலியை அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவும் நாயகன் மறுபிறவி எடுப்பதுதான் கதை என்றாலும்.. (இது அப்பா மகளுக்கு சொல்லும் தூங்கவைக்கும் கதையாகவே திரையில் நகர்கிறது.. அதாவது இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு அவரது அப்பா ராஜேந்திர பிரசாத் சின்ன வயசில் சொன்ன கதையாம்) அந்த மறுபிறவி மனிதனாகவோ வேறு உயிரினமாகவோ இல்லாமல் மிகச்சாதாரனமான சில நாட்களே உயிர் வாழும் "ஈ" யை தெரிவு செய்திருப்பதற்காகவே இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை எவ்வளவும் பாராட்டலாம்.. சிறப்பான இயக்க்ம மற்றும் திரைக்கதை.. படத்தில் எந்த இடத்திலும் வேறு எங்கும் கவனம் திரும்பாமல் கண்னிமைக்காமல் உற்றுநோக்க வைத்திருப்பதே அவரின் வெற்றி!!  வில்லனுக்கெதிராய் ஒரு மாஸ் ஹீரோ செய்யும் அத்தனை புத்திசாலித்தனமான ஹீரோயிசங்களையும் ஹீரோவாக மாறிய இந்த ஈ செய்கிறது.. பேசுவது மட்டும் இல்லை! நடனம் கூட பிரபுதேவா மாதிரி ஆடுகிறது.. இவரின் மகதீரா திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் கலை அரங்க அமைப்பு என்பவை இவை உண்மையா பொய்யா என்ற பிரமிப்பை என்னுள் ஏற்படுத்தியது..

ராஜமௌலியின் ஒன்பதாவது தொடர்ச்சியான ஹிட்டாம் இந்த நான் ஈ.. இவர் ஒரு தெலுங்கு இயக்குனர் என்றாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியிட்டிருக்கிறார் இந்தப்படத்தை!. இந்த வெற்றிகரமான இயக்குனரின் ஆரம்பகால வாழ்க்கை மிகவும் கஷ்டங்கள் நிறைந்ததாம் இந்த வெற்றிகளுக்கு பின்னால் கடுமையான உழைப்பும் முயற்சியும் நிறையவே இருந்திருக்கிறது.. இவரின் ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இந்த நான் ஈ வரை சொல்லும் பைத்தியக்காரன் (எ)கே.என்.சிவராமனின் கட்டுரை யுவகிருஷ்னா தளத்தில்

நாயகனாக நானி திரைப்படத்திலும் இதே பெயர்தான் இவரின் பெயருக்கும், திரைப்படத்தின் பெயருக்கும், "ஈ" க்கும் எவ்வளவு பொருத்தம் அட்டா!! இவரும் சமந்தாவும் வரும் காதல் காட்சிகள், வசணங்கள், நடிப்பு எல்லாமே அழகானவை மீண்டும் மீண்டும் பார்க்ககூடியவை.. இரண்டு வருடமாக ஒரு தலையாக காதலிப்பதும் அவளின் பின்னால் அலைவதும்.. தன்னை காதலிப்பாள் என நம்பியிருப்பதும் அவளின் எல்லா நடவடிக்கைகளையும் தனக்கு சாதகமாகவே எடுத்துக்கொள்வதும்.. இறக்கும் தருணத்தில் அவளும் தன்னைக்காதலிக்கிறாள் என அறிந்துகொள்வதும் அதன் போதான உணர்வுகள் என கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நின்று விடுகிறார் நானி. பிற்பாதியில் அந்த ஈ யைக்கானும் போதெல்லாம் அவரின் நினைவு வருவது அந்த பாத்திர உருவாக்கத்தின் வெற்றியே..

"பென்சிலை சீவும் பெண் சிலை" சமந்த்தா அழகாகவே இருக்கிறார்.. இவர் நடித்து பார்க்கும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.. சில நேரங்களில் பேரழகியாகவும் சில நேரங்களில் சாதா அழகியாகவும் தெரிவதே இவரின் இயல்பு.. நடிப்பிலும் குறை சொல்ல முடியாது நன்றாகவே நடித்திருக்கிறார்.. நானியை மனதோடு காதலித்தாலும் வெளியில் அலையவிடும் காட்சிகளிலும் ஈ யோடு பேசும் காட்சிகளிலும் அழகு.. அந்த பிளாங்க மெசேஜ் காட்சியை யோசித்த இயக்குனருக்கோ அல்லது உதவி இயக்குனருக்கோ ஒரு பூங்கொத்து..

இந்தப்படத்தில் வரும் இன்னுமொரு நாயகன் சுதீப்.. இவர் ஒரு கன்னட நடிகர் CCL மெட்சிலும் பார்த்திருப்பீர்கள்! வில்லனாய் அறிமுகமானாலும் ஈ யை தவிர்த்து படம் முழுவதும் வரும் ஹீரோ இவர்தான்.. அட்டகாசமான நடிப்பு ஈ யின் தொல்லை தாங்க முடியாமல் தவிர்க்கும் இடங்களிலும், ஈ யை கொல்ல வித விதமான ஐடியா போடும் இடங்களிலும் கலக்கல்!! மீட்டிங் அறைக்குள் ஹெல்மட்டுடன் நுழைவதும் அதன்பிறகு நடக்கும் காட்சிகளில் மற்றும் இன்னும் நிறைய காட்சிகளில் அவரின் வில்லத்தனத்துடன் கூடிய நகைச்சுவையை ரசிக்கலாம்..

வசனங்கள் கிரேசி மோகன் என டைட்டில் போர்ட் காட்டுகிறது.. இவரின் நகைச்சுவை லொள்ளு வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை இந்தப்படத்திலும் ஓர் இடத்தில் சுதீப் அவரின் உதவியாட்களிடம் "ஒரு மிருகம் மனிதனை நினைவில் வைத்து பழிவாங்குமா?" எனக்கேட்கிறார்.. அதற்கு உதவியாள் ஆமாம், எங்க தாத்தாவையும் நாகப்பாம்புதான் கொன்றதாக சொல்கிறார்.. அதற்கு சுதீப் இல்ல, சின்னதா எதுவும்.. அதற்கு உதவியாள் ஆமாம், சின்னப்பாம்பும் கொல்லும்.. பிறகு சுதீப் இல்லையா.. வேற ஏதாவது, அதற்கு உதவியாள் ஆமாம், வேற பாம்பும் கொல்லும்.. எனச்சொல்கிறார் இப்படியான வசனங்கள் நிச்சயமாக கிரேசி மோகனுடையதான் இருக்கும்..

ஒளிப்பதிவு ராஜமௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளார் செந்தில்குமார்.. மிக அழகாக படம்பிடித்திருக்கிறார்.. இசை மரகதமனி இரண்டு பாடல்கள்தான்.. பின்னனி இசையிலும் குட்டி குட்டியாய் பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார்.. அதிக இரைச்சல் இல்லாத தேவையான அளவாக பின்னனி இசையாக புகுத்தியிருக்கிறார்.. ஈ யை கிராபிக்சாக  பறக்க,நடிக்க, காதலிக்க,பழிவாங்க வைக்க வேலை செய்த அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.. நான் ஈ மொத்ததில் நல்லா கதை சொன்னிங்கப்பா!!!

8 comments:

♔ம.தி.சுதா♔ said...

முதலில் இரட்டைச் சதத்திற்கு வாழ்த்துக்கள்...

நானும் இந்த நான் ஈயை எதிர் பார்ப்போடு காத்திருக்கிறேன் ஆனால் சீடி இங்கே இன்னும் வரவில்லை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

Seeni said...

irattai sathathukku vaazhthukkal!

இராஜராஜேஸ்வரி said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்ள்.. பாராட்டுக்கள் !!!

சிட்டுக்குருவி said...

வாழ்த்துக்கள் மைல்கள்களை தாண்டியமைக்கு...

வலைப்பதிவு தலைப்பை மாற்றிவிட்டீர்கள் போல

புலவர் சா இராமாநுசம் said...

இரண்டு சதம் அடித்து விட்டீர்! உளங்கனிந்த வாழத்துகள்!

சா இராமாநுசம்

NIZAMUDEEN said...

அட
அட
200-க்கு
வாழ்த்துக்கள்.

Doha Talkies said...

விமர்சனம் அருமை.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html

திண்டுக்கல் தனபாலன் said...

200 வது பதிவுக்கு பாராட்டுக்கள்...
வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...