October 04, 2011

சிரிப்பூக்கள்...1

இயந்திர மயமான வாழ்கையில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.. இவ்வோட்டத்தின் நடுவே சில சின்ன விடயங்கள் நம்மையறியாமலேயே புன்னகைக்க வைக்கிறது. இவற்றுள் நகைச்சுவைத்துனுக்குகள் முக்கியமானவை.. பத்திரிகைகளில், இணையத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிறது இவ்வாறான சிரிப்பு பூக்கள் அவற்றில் நான் படித்து சிரித்தவற்றை கோர்த்து தர எண்ணுகிறேன். நீங்களும் சிரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.. சில நிமிட சிரிப்பு சில மணிநேர உடற்பயிற்சியை விட சிறந்ததாமே.. யாரு சொனனாங்க என்று ஆதாரம் எல்லாம் கேட்கப்படாது.. யாரு சொல்றாங்க என்பதை விட, என்ன சொல்றாங்க என்பதுதான் முக்கியம். சரி வாங்க சிரிக்கலாம்..

25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்........
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.........
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்..........
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.........

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

டீச்சர்: "நான் ஒரு கொலை செய்துவிட்டேன்" இதன் 'எதிர்காலம்' என்ன.?
மாணவன்: நீங்கள் ஜெயிலுக்குப்போவீர்கள்

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?

தளபதி ; மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
அரசன் : வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்வோம்..

என்ன இது..ஃபேஷன் ஷோவுல மாடல்கள் எல்லாம் தலையிலே
ஒரு மூட்டையோட, மண்ணெண்ணை கேனைத் தூக்கிக்கிட்டு
நடந்து வர்றாங்களே…?
இது 'ரேஷன் ஷோ'வாம்..!

உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லுறீங்க..அப்புறம்
எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க..?
-
வெயிலுக்கு குளிர்ச்சியா நாலு நர்ஸூங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான்..!

நீங்க கொடுத்த செக், பேங்க்ல பணம் இல்லைனு சொல்லி
திரும்ப வந்துடுச்சி…!
பொய் சொல்றாங்க! கேஷியர்கிட்டே நிறைய பணம் இருக்கு,
நானே பார்த்தேன்..!

சில உண்மைகள்..
முதல் உண்மை  : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
,
,
,
,
,
,
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

பூனை மற்றொரு பூனையிடம், 'அதோ போகுதே அதுதான் என்
'மாமியாவ்'..!

14 comments:

மாய உலகம் said...

ஆஹா.. நானும் அவசரப்பட்டு முழுசா படிக்காம ட்ரை செஞ்சி பாத்துட்டனே... முதல் முட்டாள்

மாய உலகம் said...

ஜோக்ஸ் சூப்பர்... all voted

முனைவர்.இரா.குணசீலன் said...

நகைச்சுவைத் தொகுப்பு அருமை..

அதிலும் செக்குமாட்டு நகைச்சுவை மிகவும் இரசித்தேன்...

Mohamed Faaique said...

எல்லாம் சூப்பர் ஜோக்ஸ்...
கடைசிக்கு முந்தியதில், நாம எப்பவோ பல்பு வாங்கியாச்சு

suryajeeva said...

ஹ ஹா

கோகுல் said...

மாடு ஜோக் சூப்பரு!

சே.குமார் said...

நகைச்சுவை அருமை.

ஹுஸைனம்மா said...

மாடு & மாமியாவ் - சூப்பர். பூக்களுக்கு நன்றி.

Powder Star - Dr. ஐடியாமணி said...

இன்று நிறையப் பதிவர்கள் ஜோக்குகள் போட்டிருக்கிறார்கள்! நீங்கள் போட்ட ஜோக்குகளும் சூப்பர் ரியாஸ்!

சென்னை பித்தன் said...

நோய் விட்டுப்போகும்!

M.R said...

நகைச்சுவை தொகுப்பு அருமை நண்பரே

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் நண்பா,

மொக்கைகள், மரண மொக்கை என கலந்து கட்டி அடிச்சிருக்கிறீங்களே;-))

ஆமா உங்களுக்குத் திருமணம் ஆகியதும் அந்தமானிற்கு கூட்டிப் போக மாட்டீங்க தானே அவங்களை;-)))

Anonymous said...

கலக்கல்ஸ்...வாழ்த்துக்கள் நண்பரே...

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.ரியாஸ்,
சிரிப்பூக்கள்...
சில சிந்திப்பூக்கள்...
அருமை சகோ.

Related Posts Plugin for WordPress, Blogger...